பக்கம்:நவரச நாடகங்கள்.pdf/163

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


162 விழுந்த மாதிரி நான் துடிக்குறேன்! நீ மனசுக்காரி... உம்முன்னு நிக்குறியே... சரோ: சொல்றேம்மா சொல்றேன். சொன்னத்தான் உங்களுக்கும் புரியும் எனக்கும் விடியும்... இப்ப அப்பா பட்டணம் போயிருக்காரே! ஏன் போருை?... மங்கா என்னம்மா இப்படி கேட்குறே! திருவிழா சமயத்துல பீரங்கி வெடி மாதிரி வெடிச்சுட்டு போளுரே. தெரியாதா! பட்டணம் போய், உன் முறை மாப்பிள்ளை ராஜமாணிக்கத்தைப் பார்த்து, பேசி, கையோட கூட்டிக்கிடடு வந்து... (நிதானத்துடன்) ஏய். இந்த சமாசாரத்தை என் வாயாலயே கேட்க ணும்னு உனக்கு ஆசையா... கரோ: {சலிப்புடன்) ஆமா. ஆசை ஆல வட்டம் போடுது! நீ ஒண்ணும்மா! உறியில வெண்ணையை வச்சிகிட்டு ஊரெல்லாம் நெய்க்கு அலேயுற மாதிரி, மாப்பிள்ளைய பக்கத்துல வச்சுகிட்டு, பட்டனத்துல போய் தேடப் போயிருக்காரு அப்பா. - மங்கா; யாரு? மாப்பிள்ளையா? உண்மையாவா! என்னடி கரடி விடுறே... சரே: கரடியில்லேம்மா! மாப்பிள்ளை! என் ரெண்டு கண்ணுல யும் பார்த்தேன்! இந்த வாயால தான் பேசுனேன். நம்ப மாட்டியே! பெரிய மாப்பிள்ளை. உலகத்துநீ ஒன்பதாவது அதிசயமான ஆம்பல... ம்க்கும்... (வெறுப்புடன் பேசுகிருள்) மூஞ்சி பும் முகரையும்... மங்கா (பதட்டத்துடன்) அப்படியெல்லாம் பேசாதேடி... உன்னே கட்டிக்கப் போறவன்... எதையாவது தப்பா பேசி காரியத்தை கெடுத்துடாதே... ஆமா...