பக்கம்:நவரச நாடகங்கள்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

163 சரோ: காரியத்தை நான் கெடுக்கலேம்மா. நீங்கதான் கெடுத்திட்டீங்க...இனிமே நீங்க நினைக்குற மாதிரி கல்யாணம் நடக்காது, அப்பாவும் அம்மாவும் நீங்களே பேசி சந்தோஷப் பட்டுக்கங்க...நான் போறேன் மங்கா.: இரு டி.என்னே போட்டு ஏன் இப்படி குழப்புறே? நீயும் புலம்பறே, அவரை எங்கே பார்த்தே? என்ன பேசுனே? ஏன் அவர் நம்ப விட்டுக்கு வரலே...நம்ம மேல ஏதாவது கோபமா? - சரோ: ஆமா! கோபத்தான். நம்ம வீட்டுக்கு வர்ர வழியில. குளத்தங்கரையில் அவரைப் பார்த்தேன்... என்னை பார்த்ததும் அவருக்குச் சந்தோஷம் தாங்கலெ... அவருக்கு பதவி உயர்ந்து போய், நம்ம ஊருக்கு பாற்றலாகி வந்ததைப் பத்தி பிரமாதமா பேசுனரு... பத்திரிகையில வந்த அவரோட போட்டோ யுைவம் காட்டுருை... நானும் பார்த்தேன்... அப்புறம் (சோகத்துடன்) அவரைப் பத்தி எழுதியிருந்ததை என் கிட்ட காட்டி, படிக்கச் சொன்னரும்மா... மங்கா.: (திகைப்புடன்) படிச்சியா...ஐயையோ...நீ என்ன பண்ணுனே! சரோ: பத்திரிகைய வாங்கி திருப்பி திருப்பி பார்த்தேன். பாம்பு கடிச்ச மாதிரி உடம்பெல்லாம் விர்றுன்னு ஏறுது. என் கண்ணுலயிருந்து ஆரு கண்ணிர் வழிஞ்சது. அவரோ? உன் ஆனந்தக் கண்ணிரை நிறுத்திட்டு: அழாம படின்னு சொன்னரு. எனக்குப் படிக்கத் தெரியாதுன்னு சொன்னேன். பத்திரிக்கையை வெடுக்குன்னு பிடுங்கிகிட்டு,வேகமா போய்ட்டாரும்மா பேசாம லே போய்ட்டாரு... இனிமே அவர் திரும்பியே வரமாட்டாரும்மா... வரமாட்டாரு. (அழுகிருள்).