பக்கம்:நவரச நாடகங்கள்.pdf/166

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


165 போய்ட்டேன், பட்டுப் போய்ட்டேன்னு பாட்டா பாடlங்க! ராமை: மங்கா! கொஞ்சம் தண்ணி குடு, நாக்கை நனைச்சுக் கறேன்! பச்சைத்தண்ணி குடிச்சே, ரெண்டு நாளாச்க. நான் பட்டு வந்த வேதனையைச் சொல்றேன். மங்: சரோஜா. அப்பாவுக்கு மோர் கொண்டாம்மா... இப்படி உட்காருங்க... என்ன ஆச்சுங்க... சீக்கிரம் சொல்லுங்க... ராமை: மங்கா! நான் பட்டணம் போனேன. பையன் அட்ரசைக் கேட்டேன. கேட்கிறவன் எல்லாம் விலாசத்தைப் படி ன்னுதான் கேட்குருன். வீட்டைக் கண்டு புடிக்குறதுகுள்ளே என் பொறுமையே போச்சு. வீட்டு விலாசம் இருக்குது. என்ன பணுைவேன். கடைசியில வீட்டைக் கண்டு புடிச்சேன். ஆன, பையன் பட்டணத்துலயே இல்லே. வேற ஊருக்கு மாத்தலாகிப் போய்ட்டானும், ங்கா: எங்கேயும் போகலிங்க. . ராமை: குறுக்கே பேசாதே... அப்புறம் கோவம் வந்துடும். அப்ப வந்த ஆத்துரத்துல வேகமா எக்மோருக்கு வந்தேன். டிக்கெட்டை வாங்கிகிட்டு போய் ஒரு பெட்டியில உட்கார்ந்தேன். ஒரு ஆள், சூட்டும் கோட்டும் போட்டுகிட்டு என் டிக்கெட்டை கேட்டான். நானும் கொடுத்தேன். பார்த்துட்டு திருப்பிதி தந்தான், அவன் போனதுக்கப்புறம், இன்னெருத்தரி கிட்டே டிக்கெட்டை காட்டுனேன். அது பிளாட் பாரம் டிக்கெட்டுன்னு அவன் சொன்னன், பதறி ஒடிப் போய் அவனே தேடிப்புட்டு வந்து பார்த்தா, ரயில் பெட்டியில இருந்த என் பை, பொட்டலம் ஒன்னை கூட காணுேம்.