பக்கம்:நவரச நாடகங்கள்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 மங்கா: அட பழிகாரப் பாவிங்களா. . நீங்கள்ளாம். உருப்படுவிங்களா... ராமை: எல்லாம் அப்படித்தான் பேசிக்கிட்டாங்க, , அவனுங்க ஒரு கோஷ்டியாம். என்ன பன்றது. ரயிலே விட்டு இறங்கி வந்து, ஏதாவது தெரிஞ்ச முகம் இருக்குதான்னு தேடிப் பார்த்தேன், சர்க்கஸ்ல. குரங்கை பார்க்குற மாதிரி, எல்லாம் என்னை வேடிக்கை பார்த்ததுதான் மிச்சம், ஒருத்தன் கூட தெரிஞ்சவன் இல்லேடி. . மங்கா: திருட்டு ரயில் ஏறி வர்றது தானே! புடிச்சா பணம் கட்டிக்குறது. ராமை: தப்பு. தப்பு , (கன்னத்தில் போட்டுக் கொள்கிருன்) o அப்புறம் டேஷனை விட்டு வெளியே வந்து, லாரியை புடிச்சி, கடன் சொல்லி ஏறிகிட்டு வந்தேன். சின்னப். பையன் வெளியே நிற்கிருன். பத்து ரூபா பணம் கொடு. மங்கா (மடியில் இருந்து ரூபாயை அவிழ்த்து)இத்தாம் மா! சரோஜா. . இதைக் கொண்டு போய் குடுத்துட்டு வா. (சரோஜா மோரைக் கொடுத்துவிட்டு ரூபாயை, வாங்கிக் கொண்டு வெளியில் செல்கிருள்). நாலு எழுத்துப் படிக்கத் தெரிஞ்சிருந்தா, டிக்கெட் போயிருக்காதுல்லே, . காருல திரும்பி வர்ரேன்னு: போயிட்டு, லாரியில வந்திருக்கிங்களே. ஏமாந்த சோனகிரின்னு மூஞ்சியில நல்லா எழுதி ஒட்டியிருக்குது. ராமை ஏமாந்தா என்ன? ஒரு நாளேக்கு என் கண்ணுல. படாமலா போயிடுவான்...அந்தத் திருட்டுக் கையை, காசப்பு. கடைக்காரன் மாதிரி நறுக்கித் தள்ளிட மாட்டேன். , இதுக்காக போய் அலட்டிக்குறியே, (சின்னப்பன் உள்ளிே வருகிருன்.)