பக்கம்:நவரச நாடகங்கள்.pdf/169

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


168 சின்ன: அதெப்படி நடக்கும் உன் குடும்பத்தையே பையன் அளந்து வச்கிருக்கானே, உன் பொண்னே பார்த்துட்டு ஒடிய பையன் இந்தப்பக்கம் இன்னம் திரும்பலியே! ராமயைா: சரோஜா! இங்கே வா! என்னம்மா நடந்தது? சீக்கிரம் சொல்லு (கோபமாக) சரோஜா: படிக்காத பொண்ணுன்னு என்கிட்டே பேசாமலே போய்ட்டாருப்பா. மங்கள்: நம்ம வீட்டுக்கும் வரமாட்டாராம்! சி ன: ஏன் வரவாட்டாரு! ராமையா! நீ சரின்னு சொல்லு, பள்ளிக்கூடம் போவோம். படிப்போம் பையன் டான்னு பளிஞ்சி போயிடுவான். ராமையா: ஏன் பா! இது ஏற்கனவே தீர்மானம் ஆன கல்யாணம். திருட்டுத்தனமா கட்டப்போற தாலி இல்லே, எப்படியும் கல்யாணம் நடந்தே தீரும் சின்ன ராமயைா! நீ விவரம் புரியாம பேசறே! உங்க மாப்பிள்ளைப் பையன், என் வாத்தியார் இருக்காரே, அவரு முதியோர் கல்வி அதிகாரி. , ஊரில உள்ள எல்லோரும் படிக்கணும்னு பாடுபட்டுக்கிட்டு இருக்காரு. ஒங்க குடும்பமோ படிக்காத குடும்பம். இதை கேள்விப்பட்டதும் அவரு சங்கடப்பட்டதைப் பார்த்தா, எனக்கே சங்கடமா இருந்தது, "என் மனைவி படிக்காதவன்ன என் லட்சியம் என்ன ஆகிறது? வீட்டுக்காரியை படிக்க வேண்டாம்னு சொல்லிட்டு, ஊரையெல்லாம் கூப்பிட்டு படின்ன, என்னை யாராவது மதிப்பாங்களா... நாம் செய்யுற வேலைதான் உருப்படுமான்னு அந்தப் பையஸ் கேட்குது. நியாயந்தானே...