பக்கம்:நவரச நாடகங்கள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2} பெல்மை. ; நாலு சுவத்துக்கு மத்தியிலே பேச வேண்டி யதை, நடு வீதியில நின்னு கத்தப் போறியா? விட மாட்டேன். உன்னே வெளியே போக நான் அனுமதிக் கவே மாட்டேன். யோகினி : இப்ப நான் நடுத்தெருவுக்குப் போகல! உங்க லதா கிட்டதான் போறேன். உங்க லட்சணத்தைப் பத்தி சொல்லிட்டு, நான் போறேன். அந்த பொண் ணுேடவே பேஷா குடும்பம் நடத்திக்கங்க, செல்வமணி : என்னை விட்டுட்டு போறேன்னு சொல்லு. எனக்கு ஆட்சேபணையே இல்லை. எனக்கு இஷ்டம் இல்லாத பெண்ணுேட வாழ சொல்றதுக்கு உனக்கு என்ன உரிமை இருக்கு, போ! இப்ப போ! வெளிய்ே! Nonsense! டிேகினி : நான் போறதுக்கு முன்னே ஒரு வார்த்தை! நான்ஒழுங்கா குடும்பம் நடத்துறேன்னு ஒரு வார்த்தை சொல்லுங்க... சத்தியம் பண்ணிக் கொடுங்க... சமா தானமா வாழலாம்னு தைரியம் கொடுங்க. செல்வமணி: உத்தரவாதம் வேனுமா என்னலேமுடியாது! நேத்து வந்தவ நீ! எனக்கா நீ ஆர்டர் போடறே! வோகினி : அதையே நான் திருப்பி சொன்ன, அது நல்லா இருக்காது. இது பெண்கள் வருஷம். எங்களுக்கும் உரிமை உண்டு பெருமை உண்டு! மரியாதை உண்டு. கம்மா தாலியை கட்டுனதுலை தாண்டிக் குதிச்சா உங்க கால் மட்டும் முறியாதுங்க! நம்ம கல்யாணமே மு:நிஞ்சு போயிடும். செல்வமணி : இப்படி பேசி பயமுறுத்தின, நான் பணிஞ்சு போயிடுவேன்னு கனவு காணுறியா! என்கிட்ட அது நடக்காது. சீட்டாடுறது என் பொழுது போக்கு. குதிரை ரேஸ்ல பணம் கட்டுறது என் அறிவுக்கு சவால்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நவரச_நாடகங்கள்.pdf/21&oldid=777081" இலிருந்து மீள்விக்கப்பட்டது