பக்கம்:நவரச நாடகங்கள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 ராகவன் : இந்த மாதிரி உபசாரமெல்லாம் எத்த நாளைக்கும்மா! லட்சுமி! நான் ஸ்பெஷல் சாப்பா எப்ப சாப்புடுறது அதை சொன்னதானே எனக்கு நிம்மதி:ா இருக்கும்! லட்சுமி : கொஞ்சம் விளங்குற மாதிரி தான் சொல்லுங்கப்பா! ராகவன் : புரியாதது மாதிரி நடிக்குறியேம்மா! நானே வெளிப்படையா சொல்லிடுறேன். இந்த வீட்டுல மங்கல காரியம் நடக்கனும்! நான் மாமனர் ஆகனும்! லட்சுமி : எனக்கு அதுல விருப்பம் இல்லேப்பா! அது நடக்கவும் நான் இஷ்டப்படலே! ராகவன்: (பதட்டத்துடன்) ஏம்மா! லட்சுமி : காரணம்... நீங்க தான்!. சாகவன் : நான! என்னம்மா புதிர் போடுற! நான் தானேம்மா ஆசைப்படுறவன்... - லட்சுமி இருக்கலாம். நீங்க ஆசைப்படுறது நடந்துட்டா, அப்புறம் நான் ஆசைப்படுறது நடக்காம. போயிடுமேப்பா! நீங்க தினம் இதே கேள்விாை. கேட்டுகிட்டே இருக்குறிங்க நான் இன்னைக்கு தீர்மானமா சொல்லிடுறேன். நான் கல்யாணம். செய்துக்காம இருக்கனும்னு தான் விரும்புறேன். அது தான் என் இஷ்டம், சாகவன் : படி பொண்ணு பிடிவாதம் பிடிக்குறது, எதிர்வாகம் பண்றதுன்னு ஆரம்பிச்சுட்டா, நான் எண்ணம்மா எதுத்து பேச முடியும். லட்சுமி : அப்பா இப் பேசுங்க... நான் ஆறு மாசக் குழந்கையா இருக்கும் போதே என் அம்மா இறந்து போயிட்டாங்க... இல்லியப்பா...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நவரச_நாடகங்கள்.pdf/32&oldid=777093" இலிருந்து மீள்விக்கப்பட்டது