பக்கம்:நவரச நாடகங்கள்.pdf/35

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


35 லட்சுமி சரிப்பா! (லட்சுமி கதவை தாழ்ப்பாள் போடும் சத்தம் கேட்கிறது) (தனியே பேசிக் கொள்கிருள்) ஒரு பெண் தனியே வாழ்ந்திட முடியாதோ? வாழ்ந்தே காட்டுறேன். பெரிய திருமணம், -குடும்பம். சமூகம் (மெதுவாக) அலட்சியமாக (சிரிக்கிருள்) கதவு தட்டப்படும் ஒசை யாரது? கீதா : கீதா வந்துருக்கேன் லட்சுமி... கதவை திற... லட்சுமி : கீதாவா வா வா! (கதவு திறக்கும் சத்தம்) என்னடி இந்த நேரத்துல வந்துருக்கே! பிதா : பாதி ராத்திரின்னு நினைச்சியா... பட்டப்பகல்ல, பனிரெண்டு மணிக்குத்தான் வந்துருக்கேன்... லட்சுமி . அதுக்கில்லே! வேகாத வெயில்ல வந்துருக்கியே! அதைச் சொன்னேன். r" இதர வேற ஒன்னுமில்லே! ரேஷன் கடைக்கு வந்தேன்! பாதி க்யூ தான் நகர்ந்துருக்கு. சாப்பாட்டு நேரம்னு கடையை மூடியாச்சு. தண்ணிர் தாகம் வேறே! தெரியாத வீட்டுல போய் கேட்டா கொடுப் பாங்களோன்னு சந்தேகப்பட்டுகிட்டுதான், உன் வீட்டைத் தேடி வந்தேன். லட்சுமி : தண்ணி என்னடி சாப்பாடே போடுறேன்! வா!! கிதா : கல்யாண சாப்பாடு போடு. நான் குடும்பத்தோட வந்து சாப்புடுறேன். - லட்சுமி : வேற பேச்சே உங்களுக்கு கிடையாதா? எப்பப் பாரு! கல்யாணம் கல்யாணம்!! கல்யாணம்!!! கல்யாணம் பண்ணிக்காம ஒரு பெண் வாழவே முடியாதா? கிதா : சமூகத்துல ஒரு பெண்ணுக்கு அந்தஸ்து, கல்யாணத்துக்கு அப்புறந்தான் வருது லட்சுமி.