பக்கம்:நவரச நாடகங்கள்.pdf/40

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


40 பக்கத்து வீட்டுல திருடன் புகுந்துட்டா கூட, பார்த்து கிட்டு பேசாம இருக்குற இந்த காலத்துல, உங்களை போல யாருங்க, உயிரை திரணமா மதிச்சு உதவி பண்ணு வாங்க! - குமார் : ஐயையோ! லட்சுமி : என்னங்க! குமார் : உங்க படுக்கையில உட்கார்ந்து கிட்டே இவ்வளவு நேரம் என்னை மறந்து பேசிகிட்டு இருக்குறேன். லட்சுமி : ஆபத்துக்கு பாபமில்லிங்க.. குமார் , ஆமாங்க... ஆபத்துக்கு பாபமில்லிங்க...பாபம் எப்படி நமக்கு உதவுது பார்த்தீங்களா! இவ்வளவு நீங்க அன்பா இருப்பிங்கன்னு நான் எதிர்பார்க்கவே இல்லிங்க? லட்சுமி : எதிர்பார்க்காதது தானே எப்பவும் நடக்குது! நீங்க பயந்து கிட்டே ஓடி வந்ததை நினைச்சா, எனக்கு ஒரே சிரிப்பா இருக்குது (சிரிக்கிருள்) குமார் : எனக்கும் வெட்கமா இருக்குதுங்க (இருவரும் சிரிக்கின்றனர்) ஒரு பெண்ணுேட படுக்கை அறையில, அதுவும் படுக்கையில படுத்திருந்தது எவ்வளவு தப்பு தெரியுங்களா? ராகவன் : (உள்ளே வந்தபடி) ரொம்ப தப்பு தாப்பா! லட்சுமி என்ன இதெல்லாம் (கோபமா) நான் இல்லாத நேரத்துல...உன்னேட படுக்கை அறையில... லட்சுமி : அப்பா... ராகவன் : பேசாதே! நெருப்பை மடியில கட்டுகிட்டு எத்தனை நாளைக்கு மறைச்சு வைக்க முடியும்? ஒரு நாளைக்கு புகைஞ்சு தானேம்மா ஆகனும்!