பக்கம்:நவரச நாடகங்கள்.pdf/41

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


41 குமார் : சார்! ராகவன் ; நீ பேசாதே! உன்னை பார்க்கவே எனக்கு எரிச்சலா இருக்கு என்ன தைரியம் உனக்கு இருந்தா. பட்டப்பகல்ல இந்த வீட்டுக்கு வந்து, என் மகளோட படுக்கையில உட்கார்ந்து பேசிக்கிட்டு இருப்பே! லட்சுமி கொஞ்சம் நிதானமா கேளுங்கப்பா! ராகவன் : இதுக்கு சமாதானம் செல்லப் போறே நானும் ‘சரிம்மா’ன்னு தலையாட்டனும்...ஏம்மா! இப்படி இரட்டை வாழ்க்கை வாழனும்! இந்தப் பையனைதான் நான் கல்யாண்ம் பண்ணிக்குவேன்னு என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லியிருந்தா, நானே நாலுபேர் அறிய ஜாம் ஜாம்னு கல்யாணம் பண்ணி வச்சிருப்பேனே!. இப்படி ஏன் என்னையும் உன்னையும் ஏமாத்தி வாழனும்! லட்சுமி : அப்பா! பேசி முடிச்சாச்சா! இங்கே நிற்குறவர் எனக்கு காதலர் இல்லே! போனவாரம் உங்களை ஆபத்துலயிருந்து காப்பாத்துனவர்.பேரு மிஸ்டர் குமார். குமார் : சார்...நான் தான் அன்னைக்கி சாயங்காலம். ரெளடி... ராகவன் : ஒகோ! என்னை காப்பாத்துற மாதிரி நடிச்சு, என் பெண்ைேட உறவாட வந்துட்டியா? லட்சுமி : அப்பா! இது என்ன பேச்சு அந்த ரெளடிங்க இவரை கொல்ல வந்தப்ப, எதிர்பாராத விதமா இங்கே ஒடி வந்து அபயம் கேட்டாரு! பக்கத்து ரூமை காட்டிப் போகச் சொன்னேன்! பயத்துல, என் ரூமுக்குள்ளே நவ-3