பக்கம்:நவரச நாடகங்கள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 ஒடி பதுங்கிகிட்டாரு! நடந்தது இதுதான்! நீங்க நினைக்கிற மாதிரி தப்பு எதுவும் நடக்கலேப்பா! ராகவன் : நான் பார்த்த இதே காட்சியை வேற யாரும். பார்த்திருந்தா... லட்சுமி : இவ்வளவு ஆத்திரப்பட்டு பேசியிருக்க மாட்டாங்க...நீங்க ரொம்ப தான் வார்த்தையை: கொட்டிட்டிங்க! குமார் : சார்! உங்களை காப்பாத்த வந்தேன்! உங்க உயிரைக் காப்பாத்திட்டேன்! இப்ப, உங்க மக மேலே, சந்தேகப்பட்டுட்டிங்க! என்னல, உங்க மானத்தைக் காப்பாத்த முடியலே! என் உயிரை கொடுத்தா, உங்க மகளோட மானத்தைக் காப்பாத்த முடியும்னு ஒரு நிலைமை வந்தா, நிச்சயம் அதைச் செய்ய தயாராயிருக் கேன். Miss லட்சுமி என்னை மன்னிச்சுடுங்க! சார். நான் வர்ரேன் சார்... -ராகவன் : Mr. குமார்...நான் ரொம்ப அவசரப்பட்டுட் டேன். லட்சுமி : அப்பா! ஆயிரம் பேர் ஆயிரம் என்னைப்பத்திப் பேசலாம் ஆன, உயிருக்கு உயிரா வளர்த்த நீங்களே என்மேல சந்தேகப்பட்டுட்ட பிறகு, நான் எப்படிப்பா நிம்மதியா இருக்கமுடியும்! இன்னைக்கி கீதா சொன்னது உண்மை தாம்பா! * - - சாகவன் : என்னம்மா சொன்ன!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நவரச_நாடகங்கள்.pdf/42&oldid=777104" இலிருந்து மீள்விக்கப்பட்டது