பக்கம்:நவரச நாடகங்கள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49. o ரவி : மறக்க மாட்டேன் நாராயணு...... நான் பசியும் பட்டினியுமா பரிதவிச்சப்போ......ஒரு சிங்கிள் டீ வாங்கி, நாம இரண்டு பேரும் பகிர்ந்து குடிச்சதை என்லை மறக்க முடியுமா! ஆன, கலா கிட்டே...முதல்ல சொல்லணும்னு என் மனசுல பட்டது. அதனுலேதான் அப்படி சொன்னேன். நீ கோவிச்சுக்காதே! நாரா : ரவி.ரவிகுமார்னு சொன்ன போதும்...பத்திரிகை நிருபர் எல்லாம் பறந்து ஓடிவர்ராங்க. பத்திரிகையில: படம் போட்டு பத்தி பத்தியா பாராட்டி எழுதுருங்க. கல்லூரி மாணவர்களுக்கெல்லாம் உன் ஒவியம்னு ஒரே பைத்தியம்! அந்த அளவுக்கு நீ உயர்ந்துட்டே! நான்ன...அதே நிலைமையில அப்படியேதான் இருக் குறேன்! நான் மீறிப் பேச முடியுமா? ரவி : அப்படி இல்லே...என்னைப் பாரு...எனக்கே ஆச்சரியமா இருக்கு! இந்த அஞ்சு வருஷத்துக்குள்ளே... நான் இந்த அளவுக்கு உயர்ந்து முன்னேறி வருவேன்னு: நான் கனவு கூட காணலேப்பா...... நாரா : நான் கனவு கண்டேன்...பலிச்சுட்டது. இந்த புத்தம் புதிய பெரிய பங்களாவிலே நீ குடியிருக்கும் போது, எனக்கு பார்க்க எவ்வளவு பூரிப்பா இருக்கு தெரியுமா! அப்பப்ப வந்து, நான் உன்னைப் பார்த்துட்டு போறதே எனக்கு பெருமையா இருக்கு. ரவி : தேங்க்யூ.எல்லாம் ஆண்டவனேட ஆசிர்வாதம்... நாளைக்கு சரியா 4 மணிக்கு வந்துடு. நாம பிறகு பார்க்கலாம். ஒகே... நாரா வர்றேன். ரவி...நிச்சயம் வந்துடுறேன். ரவி... ஒண்ணு சொல்றேன் மறத்துடாதே...கலா கிட்டே எண்சாண் மனுஷன் மாதிரியே நிமிர்ந்து நில்லு...... ஒரு சான குறுகிடாதே......

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நவரச_நாடகங்கள்.pdf/49&oldid=777111" இலிருந்து மீள்விக்கப்பட்டது