பக்கம்:நவரச நாடகங்கள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 கலா : ரவி...என் மேல. நீங்க இவ்வளவு அன்பு செலுத்து lங்களே...இதுக்கு நான் என்ன கைமாறு செய்யப் போறேன்...? ரவி : அதுவா? நீ எப்பொழுதும் என் கூடவே இருக்கணும்! வாழ்க்கை பூரா வாழனும், அது போதும், கலா , ஆசையைப் பாருங்க... ரவி : கலா... சகாரப் பாலைவனமா இருந்தாலும், சமுத்தி ரத்து மத்தியில் ஒரு சிறு படகுல இருந்தாலும், நீ என் கூட இருந்தா-அந்த இடம் தான் எனக்கு சொர்க்கம், வேறு எதையுமே நான் விரும்ப மாட்டேன். ஆமா! கலா : நாம நினைக்கிருேம்...கடவுள் என்ன நினைக் கிருரோ... ரவி : கலா...இவ்வளவு நாள் பழகினேன்...நீ யாரு? உனக்கு உறவு யாரு? அப்பா அம்மா உண்டா? வசதியான குடும்பமா? நீ என்ன படிச்சிருக்கே? இதையெல்லாம் நான் தெரிஞ்சுக்க ஆசைப்படலே...ஏன் தெரியுமா? சின்ன குழந்தை பிரியப்படுற பொம்மை மேல அதுக்ரு ஆசை இருக்குமே தவிர, அதோட வரலாற்றை தெரிஞ்சுக்க அது விரும்பறது இல்லே... கலா : நான் இப்பவே என்னைப் பற்றி எல்லா விபரத்தையும் சொல்லி விடுறேனே! எனக்கும் சொன்ன மாதிரி இருக்கும். உங்களுக்கும் தெரிஞ்ச மாதிரி...சொல் லட்டுமா? (டெலிபோன் மணி அடிக்கிறது...ரவி பேசுகிருன்) ரவி : ஹலோ...ரவிகுமார் பேசுறேன். யார் பேசுறது? சாந்த நான்...சாந்தமூர்த்தி பேசுறேன். ரவி : மன்னிக்கனும்...எந்த சாந்தமூர்த்தின்னு தெரி யல்லே...தயவு பண்ணி கொஞ்சம் விபரமா சொன்ன...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நவரச_நாடகங்கள்.pdf/53&oldid=777116" இலிருந்து மீள்விக்கப்பட்டது