பக்கம்:நவரச நாடகங்கள்.pdf/59

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


58 கல அவருக்கு ரொம்ப நல்ல மனசுங்க... இப்ப வந்தா, அவர் என்ன கேட்பாரு? ரவி : என் சொத்து பூரா கேட்பாரு... அதுக்காகத்தான், அவர் பேருக்கே என் சொத்து பூராவையும் ஒரு பத்திரமா எழுதி, பத்திரமா வச்சிருக்கேன். இதோ і тії! கலா : பனம் போச்சுன்னு என்ன பண்றது? ரவி : பணம் தானே போகும்? என் புகழும் திறமையும் போகாதே! அவர் எதைக் கேட்டாலும், தர்ரதாக நான் வாக்குத் தந்திருக்கேனே. (கதவு தட்டப்படும் சத்தம் கேட்கிறது) சாந்த சார், ரவி சார்! நான் உள்ளே வரலாமா? ரவி : கலா! பிளாஸ்குல காபி இருக்கு. நீ போய் இரண்டு கப்புல ஊத்திக் கொண்டு வா. (கதவு பக்கம் திரும்பி) ஐயா. வாங்க! உள்ளே வாங்க! உங்களுக்காகத் தான் காத்துக்கிட்டிருக்கேன். சாந்த செளக்யமா இருக்கியாப்பா... அஞ்சு வருஷத்துக் குப் பிறகு இப்ப தான் பார்க்குறேன். பணத்திலும், புகழிலும், உடம்பிலும் எல்லாத்திலும் எவ்வளவோ மாற்றம். நல்லா இருக்கிறியா தம்பி? ரவி : ஆமாங்க! எல்லாம் உங்க ஆசீர்வாதம் தான். கலா... காபி கொண்டு வாயேன் (கூப்பிடுகிருன்) சாந்த யாருப்பா அது? உன்ளுேட மனைவியா? ரவி : இல்லிங்க... எங்களுக்கு இன்னும் கல்யாணம் ஆகலே! ... என்னுேட வருங்கால மனைவி. கலான்னு பேரு.