பக்கம்:நவரச நாடகங்கள்.pdf/6

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


4 வண்ணச் சுடர் நாடகப் பகுதியில் ஒலிபரப்பிய (முதல்) ஆறு நாடகங்களும்; சென்னை தொலைக்காட்சி நிலையம் ஒளிபரப்பிய (கடைசி) மூன்று நாடகங்களும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. நாடக நூல்கள் விற்பனையாகாது என்று பயப்படுத்துகின்ற இந் நாளில், இது எனது நான்காவது நாடக நூலாகும். இனி பல நாடக நூல்கள் தொடர்ந்து வெளி வர இருக்கின்றன. விற்பனைக்கென்று கவர்ச்சியான நிகழ்ச்சி களே சேர்த்து விடுகின்ற மனுேபக்குவம் இல்லாததால், விறுவிறுப்பாகச் செல்கின்ற 'ஜனரஞ்சகமான' நிகழ்ச்சிகளே வைத்து உணர்ச்சிகரமான உரையாடல்களினல் உரு வாக்கப் பட்டிருக்கும் இந்நூலை, படித்து முடித்ததும் நீங்கள் உணரக்கூடும் என்ற நம்பிக்கையில், இந்நூலுக்குரிய முன்னுரையை முடித்துக் கொள்கிறேன். எனது ஆரம்பகால எழுத்து முயற்சிகள் நாடகத்தில்தான் முகிழ்த்தன. நாடகங்கள் எழுதுவதிலும், நடிப்பதிலும், கல்லூரி நாட்களில் ஈடுபட்டிருந்த நான், சென்னைக்கு வந்து நாடகத் தயாரிப்பாளனாகவும் இருந்து, கஷ்டப்பட்டு பெற்ற அனுபவங்கள், இந்த நாடக நூலே எழுதும் பக்குவத்தை ஊட்டின. அன்று அல்லற் படுத்திய நாடக உலகத் திற்கு, இன்று என்னல் பல நல்ல நூல்களைத் தரமுடிகிறது என்ற எண்ணம், கசப்பான