பக்கம்:நவரச நாடகங்கள்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 சாந்த : கண்னுக்கு அழகான கணவன், காசில்லாம். சோறு போடாதும்மா. பேசாமே என் கூட வந்துடு! கலா : இணை பிரியாமே இருக்குற எங்க வாழ்க்கையில குறுக்கிட்டு, இப்படி சோதனை பன்றீங்களே...என்லை ரவியை பிரிஞ்சு வாழ முடியாது. சாந்த நீ பிரிய முடியாதுன்ன போதுமா? நீதான் எனக்கு வேணும். ரவி...கலாவை என்கூட அனுப்பு:நேரமாகுது! வாம்மா போகலாம். ரவி : சார், ஏன் இப்படி என்னை கொல்றீங்க...என்னை கொன்னுட்டு, என் பிணத்து மேலே, என் கலாவை நடத்தி கூட்டிக்கிட்டு போங்க சார்! சாந்த : இதென்னப்பா கலா மேல இவ்வளவு பாசம்... இந்தப் பொண்ணு இல்லேன்ன...உலகத்துல வேற பொண்னே இல்லாமலா போகும்? ரவி : சார்! ஒரே ஒரு வார்த்தை, தயவு செய்து கேளுங்க. என் வாழ்நாள்ல, ஒரே ஒரு பெண்ணைத்தான் மனைவியா பார்த்தேன். மற்ற பெண்களை எல்லாம் சகோதரிகளாகத் தான் நினைச்சேனே தவிர, வேறு எந்தவிதமாகவும் தப்பாகூட நினைச்சுது இல்லீங்க.மனம் விட்டுப் பழகியது, மனசார நேசிச்சது, மனம் போல வாழலாம்னு கனவு கண்டது எல்லாமே கலாவோடத் தான். கலா இல்லேன்ன...எனக்கு குடும்ப வாழ்க்கை இல்லே...பரதேசி வாழ்க்கை தாங்க, இப்ப சொல்லுங்க! கலாவை நீங்க வேணும்னு கேட்குறிங்களே...இது என்ன சார் நியாயம்? கலா அவரை சோதனை பண்ணுனது போதும். உண்மை யைச் சொல்லிடுங்கப்பா...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நவரச_நாடகங்கள்.pdf/63&oldid=777127" இலிருந்து மீள்விக்கப்பட்டது