பக்கம்:நவரச நாடகங்கள்.pdf/68

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பார்வதி விஜயம் காட்சி 1 இடம் : பார்வதி, மாதவன். உள்ளே மாதவன் வீடு. மாதவன் : (சற்று உரத்த குரலில்) பார்வதி! பார்வதி இத்தனை முறை கத்துறேனே! உன் காதுலே விழுதா? பார்வதி : (எரிச்சலுடன்) விழுது, விழுது மாத காதில விழுந்துமா இப்படி கம்முனு இருக்கே! பார் : நான் கேட்டதெல்லாம் உங்க காதுல விழுந்ததா? மாத நீ என்ன கேட்டே! நான் பேசாம இருந்தேன்!... பார் : ஆகா! ஒண்ணுந் தெரியாத சின்னக் கண்ணு மாதிரி பேசுறீங்களே! பீச்சுக்கு போகலாம்னு கேட்டா பேச்சு மூச்சு இல்லே! சினிமாவுக்கு கூப்பிட்டா. இனிமே நமக்கு எதுக்குன்னு கேட்கறது! சரி, ஒட்டலுக்காவது வாங்கன்ன, நான் என்ன நோட்டா அடிக்கறேன்னு கிண்டல் பண்றது! நீங்க என்னதான் மனசுல: நினைச்சுகிட்டு இருக்கிங்க. மாத கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கலாமுன்னு நிகனச்சுகிட்டு இருக்குறேன்.