பக்கம்:நவரச நாடகங்கள்.pdf/69

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


68 பார் : (கோபமாக) ஒரே அடியா போய் ரெஸ்ட் எடுத்துக்கங்க. உங்களுக்கும் எனக்கும் இனி ஒரு நிமிஷங் கூட ஒத்து வராது. நான் என் புறந்த வீட்டுக்குப் போறேன். மாத நீ கோபிச்சுகிட்டு போற அளவுக்கு இங்கே என்ன நடந்துச்சு? பார் : என்ன நடக்குலே! உங்களுக்கு கழுத்தை நீட்டி பத்து வருஷம் ஆச்சு. என்னை பசியும், பட்டினியுமாத்தான் போட்டு கொன்னிங்களே தவிர, நல்லா வசதியா வாழ என்ன பண்ணுனிங்க! இந்த வீட்டில ஒரு பேன் உண்டா? பட்டு மெத்தை உண்டா? படுக்க கட்டில் உண்டா? அதுவும் வேண்டாம். ஒரு பஞ்சு தலையணை யாவது உண்டா? மாத : கேட்டாச்சா? இன்னும் பாக்கி இருக்கா? பார் : கடவுள் வரம் கொடுக்கற மாதிரி, கேட்டாச்சான்னு, கேட்குற ஸ்டெயிலே ஸ்டெயில்தான். இங்க வரட்டு ஜம்பமும் வாய் சவடாலும்தான் நிறைய இருக்கு. மாத கொஞ்சம் மரியாதை கொடுத்து பேசேன். நான் உனக்கு புருஷன்டி புரியுதா? பார் . இதை நீங்க சொல்லித்தான் புரியணுமா? நாலு: குழந்தைங்க வீட்டுல லோலோன்னு கத்திகிட்டு அலையுதே... அந்த சாட்சிகள் போதாதா! உரிமைக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லே. மாத பின்ன எதுலதான் குறைச்சல்னு சொல்லு? பார் : அடுத்த வீட்டு அருணகிரியை பாருங்க! உங்க மாதிரி அவரும் ஒரு குமாஸ்தாதானே! அவர் வீட்டுல எப்படி எப்படி எல்லாம் வாழருங்க பாத்தீங்களா?