பக்கம்:நவரச நாடகங்கள்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 பெரிய அலையா வந்தா அலைக்குள்ளே முழுகிக்கலும், அப்பதான் குளிக்க முடியும், மாதவன் : புரியலியே ! சேது : குடும்பக் கடலிலே மனைவிகிட்டே இருந்து கஷ்டங்ற சின்ன அலை வந்தா சமாளிச்சுக்கணும். மாதவன் : எனக்கு மாதிரி பெரிய அலையா வந்தா? அருண நிலையையே மாத்திக்கணும். மாத புரியும்படியா சொல்லுப்பா. சேது துன்பத்தை முதல்ல துளைக்கணும், அப்புறம் தொலைக்கணும். இந்த மாதிரி கஷ்டம் உனக்கு எப்படி வந்தது? முதல்ல அதைச் சொல்லு. மாத எல்லாம் இவலை தான் வந்தது! அருண : என்னப்பா என்னைச் சொல்றே...கல்யாணம் ஆச்சான்னு கேட்டா, உன் வீட்டுல பெண் இருக் கான்னு கேட்ட கதை மாதிரி இருக்கே! மாத உண்மைதாம்பா...நீ வசதியா இருக்கிறேன்னு தானேப்பா என் சம்சாரம் என்கிட்ட சண்டைப் போட்டுக்கிட்டு ஊருக்குப் போயிட்டா! அதுசரி: இவ்வளவு வசதி உனக்கு எங்கேயிருந்து வந்தது? சேது . அவன் அதிருஷ்டக்காரன். வசதியா வாழருன், ஏண்டா உனக்கு இந்த ஆராய்ச்சி? அருண : சேதுராமா! உனக்குதான் சுண்டல் வாங்கி தந்திருக்கோமே! சுண்டலை திங்காம கிண்டலா பண்றே! சேது . சரிப்பா...காசிக்குப் போயும் கர்மம் தொலையாத மாதிரி, கடற்கரைக்கு வந்தும் கஷ்டத்தைப்பத்தியே பேசுறீங்களே...நான் வர்ரேம்பா...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நவரச_நாடகங்கள்.pdf/73&oldid=777138" இலிருந்து மீள்விக்கப்பட்டது