பக்கம்:நவரச நாடகங்கள்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

77 சிந்தாமணி, சரிதான் வாங்க! போய் பேர்க் குழந்தைகளைப் பார்த்துக்குவோம். பார்வதி! ஏதாவது வேணுமுன்ன கூப்பிடும்மா. வந்துடருேம். (போகிருர்கள்) பார்வதி : ஏங்க! நீங்க எப்போ இவ்வளவு சமர்த்தா மாறினிங்க (குழைவு). மாதவன் ; நீ என்ன விட்டுட்டு போனப்புறம்தான். பார்வதி : பார்த்தீங்களா! என்னை மறுபடியும் போகச் சொல்றிங்களே! நான் போறேங்க! மாதவன் . அதுக்கில்லே பார்வதி! நீ என் கூட இருக்குற வரைக்கும் சண்டை போடவும், சமாதானம் செய்யவுந் தான் நேரம் இருந்தது. நிதானமா யோசிக்க நேரமே கிடைக்கலியே அதை சொன்னேன். பார் : கட்டுன புருஷனே கரிச்சு கொட்டுற அளவுக்கு நான் பொல்லாதவளா இருந்துருக்கேன். அப்படி இருந்த துனலே தானே, இவ்வளவு சாமான்களையும் சேர்க்க முடிஞ்சது. பணம் பத்தும் செய்யுங்க. ஏங்க... நீங்க எப்படி சம்பாதிச்சீங்கன்னு சொல்லவே இல்லீங்களே? மாத அதா... கொஞ்சம் பொய் சொன்னேன். கூசாம லஞ்சம் வாங்கினேன். கைமறவாகமிஷன் வாங்கினேன். அவ்வளவு தான்! பார் . ஏதோ மர்ம கதையை படிக்குற மாதிரி இருக்குங் களே! இன்னும் கொஞ்சம் புரியும்படியா எங்களுக்கு சொல்லுங்களேன்! மாத உத்தியோகம் வேணுமுன்னு எத்தனையோ பேர் அலையருங்க! பரீட்சையில் பாஸ் பண்ணனும்னு எத்தனையோ பேர் பறக்கருங்க! உத்யோக மாற்றல் வேனும்னு எத்தனையோ பேர் தவிக்கருங்க! அவங்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நவரச_நாடகங்கள்.pdf/78&oldid=777143" இலிருந்து மீள்விக்கப்பட்டது