பக்கம்:நவரச நாடகங்கள்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 எல்லோரையும் தேடி பிடிச்சேன்! காரியத்தை முடிச்சேன். கத்தை கத்தையா கையில்நோட்டு! எப்படி? பார் : அடேயப்பா! எ ன க் கு சந்தோஷம் தாங்க முடியலேங்க! இப்படி...ஏங்க! நீங்க இன்னும் ரெண்டு வருஷம் விடாம சம்பாதிச்சா? மாத , எட்டடுக்கு மா விரி ைக! இ ம் பா லா கார்! எல்லாத்திலேயும் ஏர் கண்டீஷன் எப்பவும் இருக்க, இன்பமான வாழ்க்கை வாழலாம். பார் : சொல்லாதீங்க! செஞ்சு காட்டுங்களேன்! பத்தாத சம்பளம் வாங்கிகிட்டு வந்து, பசியும், பட்டினியுமா வாழ்ந்த வாழ்க்கை போதும் ; கடவுளே ! இனி இப்படியே வாழறதுக்கு கண் திறப்பா! என் மனசு குளிர்ந்து போச்சு! மாத : பார்வதி ! இன்னும் கொஞ்சம் சம்பாதிச்சுட்டு, வேலையை விட்டுட்டு, வீட்டோட இருந்து ஒய்வு எடுத்துக்கலாமுன்னு இருக்கேன்! பார் : ராஜா மாதிரி இருங்க! ராஜ உபசாரம் நான் செய்யுறேன். மாத நிம்மதியா சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு வா! போகலாம்! அருண : (வந்து கொண்டே) மாதவா ! நானும் சாப்பிட வரலாமா! மாத வாப்பா அருணகிரி! நான் வாங்குன பொருள்களை யெல்லாம் வந்து முதல்ல பாரு! அப்புறம் சாப்பிட போகலாம். அருண : இந்த லெட்டரை முதல்ல படி! அப்புறம் பேசலாம். மாத : என்னப்பா இந்த நேரத்துல லெட்டர்.?......

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நவரச_நாடகங்கள்.pdf/79&oldid=777144" இலிருந்து மீள்விக்கப்பட்டது