பக்கம்:நவரச நாடகங்கள்.pdf/81

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


30 விலங்கோடு போய், கோர்ட்டுல நின்னு, கைதியா மாறி கம்பி எண்ணப் போறேன்...என் குழந்தை களோடு நீ நடுத் தெருவில நிக்கப் போறியே! (அழுதல்) பார்வதி : அற்ப சுகத்துக்கு ஆசைப்பட்டேன், உருட்டி முழிக்கப் போய் உள்ள முழியும் நொள்ளையாய் போச்சே! ஏங்க! இதிலிருந்து தப்பிக்க வேற வழியே இல்லையா? அருண : கோர்ட்டுல போய் எதிர் வழக்காடனும்! பார்வதி : இந்தாங்க, எங்கிட்டே இருக்குறது இந்த தோடும். மூக்குத்தியும் தான். இதை வித்தாவது என் கணவரை காப்பாத்துங்க (அழுதல்) அருண கேஸ் ரொம்ப பெரிசும்மா! லஞ்ச ஊழல், மோசடி வழக்கு. குறைஞ்சது 10 வருஷமாவது தண்டனை கிடைக்கும், பார்வதி: (சத்தம் போட்டு அழுகிருள்.) அப்பா, அம்மா. இங்கே வாங்களேன்!என் நிலைமையைப் பார்த்தீங்களா! (உள்ளே பேச்சுக் குரல் உள் அறையிலிருந்து) சிந்தா என்னங்க! பார்வதி அழற சத்தம் போல இருக்கு. பரமா ; போடி. உன் மகளுக்கு மெதுவா பேசவும் தெரி யாது. அழவும் தெரியாது. ஏதாவது குடும்ப சண்டையா இருக்கும். இங்கே பேசாம இரு சிந்தா இல்லீங்க. வாங்க போய் பார்க்கலாம்i (வருகின்றனர்) பார் : என்னை மன்னிச்சுடுங்க. மாத பார்வதி! நான் உன்னை மன்னிச்சுடலாம். நான் செய்த தப்புக்கு மன்னிப்பே கிடையாதே!