பக்கம்:நவரச நாடகங்கள்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

89 விா இன்னும் இவன் P. U. C-யே தாண்டலே... முத்து: நீங்க இன்னும் எட்டாவதையே தாண்டுலியேஏன் சார்? நீங்களே சொல்லுங்க- எங்க அப்பாவை விட நான் புத்திசாலிதானே. அம்பி: அப்பா காலம் வேறே- இன்றைய நிலைமை வேறே! இன்னும் படிச்சா நிறைய முன்னேறலாம் இல்லியா... முத்து; தம்மின் மெலியாரை நோக்கித் தமதுடமை அம்மா பெரிதென்று அகமகிழ்க’ வீரா: என்னடா புதுசா பாட்டு பாடறியே முத்து: தம்மை விட கீழானவங்களைப் பார்த்து, நாம் உயர்ந்த நிலையிலே இருக்கிருேம்னு நினைச்சாத்தான் மனசுக்கு அமைதி வருமாம். வீரா: தடியா... படிடான்ன பாட்டா பாடுறே... சார்! இவன் இப்படித்தான் எதையாவது ஏட்டிக்குப் போட்டியா பே சுவான். இவனை ஒரு நல்ல நிலைக்கு நீங்கதான் கொண்டு வரணும், இன் ைக்கே நல்லநாளு! பாடத்தை தொடங்குங்க. நான் வெளிலே போய்ட்டு வந்துடறேன். (போகிருர்) முத்து: அப்ப நான் காலேஜூக்கு போகனுமே... அம்பி; எந்த காலேஜூக்கு மூத்து தோற்ருரை முன்னேற்றும் தோற்ருரியல் காலேஜூக்குத்தான்... அதாவது டியோடிரியல்! அங்கே போனத்தான் எனக்கு நிம்மதியே வரும். அம்பி; எப்படி? முத்து: என்னை மாதிரி பெயிலானவக்க நிறைய பேர் அங்கே இருக்காங்களே...அவங்களைப் பிார்த்தாதான். நவ-6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நவரச_நாடகங்கள்.pdf/90&oldid=777157" இலிருந்து மீள்விக்கப்பட்டது