பக்கம்:நவீன தெனாலிராமன்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104

‘கடத்தல்காரர்களை வைத்துப் படம் எடுக்கிறார் களே அதைத் தான் சொல்கிறேன். பெரும்பாலும் படங் களில் இதுபோன்ற வில்லன்கள் தாம் வருகிறார்கள். ‘ரஜனி காந்தி விஜயகாந்தி இவர்கள் தாம் தெய்வ அவதாரங் கள் என்று கேள்விப்படுகிறேன். சிறுவர்கள் எல்லாம் இவர் களைத்தான் வழிபடுகிறார்களாம். இவர்கள் இந்த வில் லன்களை எதிர்த்து அடிக்கும் படங்கள் தாம் ஓடுகிறதாம் - இதுக்கும் புராணப் படங்களுக்கும் எங்களால் வித்தி யாசம் காண முடியவில்லை. அடி உதை இடி மின்னல் இது தானே தமிழ்ப்படம். இந்த நவீன புராணபடங்களை தேவ லோகத்து ரசிகர்கள் பார்க்க வேண்டுமாம்'’ என்றார்.

டி.வி. நிலையத்தில் இவருக்கு ஒரு சந்திப்பு நிகழ்ச்சி ஏற்பட்டது. அதற்கு என்றே நியமிக்கப்படும். ஆரணங்கு ஒருத்தி அவரை வளைத்துக் கொள்கிறாள்.

இவள் தெய்வப் பெண்ணோ மானிடப் பெண்ணோ என்ற சந்தேகம் வந்து விட்டது.

அவள் கண்கள் இமைத்தன; கால்கள் காசினியினில் தோய்ந்தன; இதழ்களில் சிவப்பேறின; அவள் வைத் திருந்த பூ பிளாஸ்டிக் பூவாக இருந்தது. அதனால் இவள் மானிடப் பெண்ணே என்று முடிவுக்கு வந்தார்.

‘நீங்கள் ஒண்டிக் கட்டையா ஜால்ராவா?'’ என்று ஒரு கேள்வி கேட்டு வைத்தாள்.

அதாவது மணம் ஆகாதவரா மணம் ஆகி மனைவிக் குத் தாளம் போடுகிறவரா என்பது இதன் அர்த்தம் என் பதைத் தெரிந்து கொண்டார்.

பொடிமட்டை’ எடுத்துக் கொஞ்சம் உறிஞ்சினார். உற்சாகம் வந்தது. ‘இதென்ன கெட்ட பழக்கம்’ என்கின்றனர்.

‘புகை பிடிக்கக் கூடாது என்று சொல்கிறார்களே தவிரப் பொடி போடக் கூடாது என்று யாரும் சொல்ல வில்லையே’ என்று கூறினார்.