பக்கம்:நவீன தெனாலிராமன்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

111

நாரதர் மிகவும் சோர்வோடு காணப்பட்டார். பாரத நாட்டில் மக்களைத் திசை திருப்பும் கடத்தல் படங்கள் தான் ஓடுகின்றன என்ற அபிப்பிராயத்தில் வந்தவர்; அதற்கு எதிர்ப்பும் இருக்கிறது என்பதை அறிகிறார்.

அன்று இரவு பொழுதுபோகவில்லை. வெள்ளிக் கிழமை நள்ளிரவுப் படம் பார்க்கும் வாய்ப்புத் கிடைத்தது.

ஏர்முனை’ என்ற தமிழ்ப்படம் காட்டப்பட்டது. பாரத தேசம் முழுவதும் பார்க்கிறார்கள்:

அவருக்கே வியப்பு ஏற்பட்டது.

விவசாயிகளின் அல்லல்கள் தீவிரமாகச் சித்திரிக்கப் பட்டு இருந்தன. அரசியல் மோசடிகள், கட்சிகளின் ஆதிக்கம், அதிகாரிகளின் அட்டூழியங்கள், மக்கள் எதிர்ப்பு, பயங்கரவாதம், சாலை மறியல் போராட்டம் இவற்றைக் காட்டிய படம் அது.

இன்று மக்கள் விழிப்போடுதான் இருக்கிறார்கள் போராட்டங்கள் தொடர்கின்றன என்பதை அச்சித்திரம் காட்டியது.

‘காதல்’ என்பது அடியோடு இடம் பெறவில்லை, வாழ்க்கையின் மோதல்களைக் காட்டும் அருமையான படம் அது.