பக்கம்:நாகப்பட்டினம்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

viii

என்ற வள்ளுவர் காட்டிய வழி, நாட்டை ஆளும் அமைச்சர் மட்டும் நடப்பதற்கு அன்று. ஏட்டை ஆளும் எழுத்தாளர்க்கும் பொருந்தும். இவ்வழிப்படி தெரிய வேண்டியவற்றை ஆய்ந்து தெரிந்து தெரிந்தவற்றைத் தெளிவாகச் சொல்லியும் - அதனையும் ஒருதலையாக - உறுதியாகச் சொல்லியும் கடமையாற்றியுள்ளேன். - இப்பணி அரும்பணி என்று அயரவில்லை. நாகையில் எனக்கு அருமையான நண்பர்கள் நல்ல எண்ணிக்கையினர். அவர்களுள் வேண்டப்படும் கருத்துக்கு உரியவர்களை இனத்துணையாகக் கொண்டுள்ளேன். -

"தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு அரும்பொருள் யாதொன்றும் இல்" என்ற உந்துதலின்படி இந்த அரும்பொருளை அணைவுப் பொருளாகக் கொள்ள முடிந்தது. அவ்வப்போது உதவிய நண்பர்களின் உதவியை ஆங்காங்கு உரிய இடத்தில் அடிக்குறிப்பாகப் பெயர் குறித்துக் காட்டியுள்ளேன். இங்கு உளந்தோய்ந்த நன்றிகூறி மகிழ்கின்றேன்.

சான்றுகளும், மேற்கோள்களுமாகப் பல தமிழ் நூல்களில் வரிகள் இந்நூலில் அமைந்துள்ளன. கல்வெட்டு, செப்பேடு, ஆவணம். அறிக்கை எனப் பல சான்றுகள் ஆங்காங்கு பேசும். சில ஆங்கில நூற்கருத்துக்களும் கைகொடுத்து நிற்கும்.

என்றும், என் அன்பில் தோய்ந்து, அவர்தம் அன்பில் தோய்த்துத் தோன்றும் துணையாய் விளங்கும் நண்பர்கள் புலவர் இரா. இராசு அவர்களுக்கும், புலவர் இரா. இராமதாசு அவர்களுக்கும் நெஞ்சுசார்ந்த நன்றி என்றும் உண்டு. இன்றும் இங்கு படைத்து உவக்கின்றேன்.

பல ஆண்டுகள் தட்டச்சில் பழகிய கை, தட்டச்சு பழுதால் எழதத் துவங்கியது, எழுத்துக்கள் நெளிந்த புழுக்களின் வளைந்த சாரிகளாய்ப் பிறந்தன. இதனைப் படித்துப் புரிந்து தட்டச்சாக்கி உதவிய என் அன்பு மகள் திருமதி ந. கலைவல்லிக்கு (மன்னார்குடி) உளம் நிறைந்த வாழ்த்துடன் நெஞ்சம் நிறைந்த நன்றி கூறுகின்றேன்.

நன்றிக்கு நிறைந்து நிற்பவர் பதிப்புச் செம்மல் முனைவர் ச.மெய் யப்பனார். தூண்டியும் உசாவியும் இப்பணியை நிறைவாக்கினார். அவ்வரும் நண்பர்க்கு எல்லையில்லா நன்றி படைக்கின்றேன். அவர்வழி மணிவாசகர் பதிப்பகத்தார்க்கும் பாராட்டும் நன்றி வாழ்த்தும் உரியன.

கடைகாப்பாக ஒன்றை எழுத வேண்டும். - நாக பட்டினம் என்னும் இந் நூல் வளாகத்தில் உலவும் அன்பர்கள் நிறையச் செய்தியைப் பெறுவர். முறையான முடிபுகளை அறிவர். உறுதியான கருத்துக்களை அடைவர். இவை கட்டுக்கோப்பான உறுதிகள்.

படிப்பவர் பலர்க்குப் பயன்: எழுதிய எனக்கு மனநிறைவு. வணங்கி மகிழ்கின்றேன். கலைக் குடில் - அன்டன் 59, எழில் நகர் கோவை இளஞ்சேரன் தஞ்சாவூர் - 513 007

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/10&oldid=584895" இலிருந்து மீள்விக்கப்பட்டது