பக்கம்:நாகப்பட்டினம்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆட்சி நாகை - 85

மராத்தியரில் இருவர்

இப்பதின்மூன்று மன்னரில் நாட்டு எண்ணம் கொண்டவர் என இருவரையே குறிப்பிடலாம். ஒருவர் பிரதாப சிங்கு. மற்றவர் இரண்டாம் சரபோசியாகிய "தஞ்சை துவங்கும் போசன் சரபோசி, மகாராசன்" என்று பாடப்பெற்றவராவர். -

இன்னோர் இருவரும் நாகைக்கு வருகை புரிந்துள்ளனர். பிரதாப சிங்கின் பெயரால் நாகைக்குத் தெற்கே 12 கிலோ மீட்டரில் இருந்த பூவத்தடி' என்னும் ஊர் 'பிரதாபராமபுரம் என்று ஆயிற்று. சரபோசி தஞ்சை மாவட்டச் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டவர். அவர் வருகையை நாகை பெற்றது. அவர் தஞ்சை அரண்மனையில் புதிய கலைக் கட்டடங்களை எழுப்பியவர். தமிழ், வடமொழி, ஆங்கிலம், மராத்தி முதலிய மொழிகளிலமைந்த மருத்துவம், கணிப்பம், (சோதிடம்) ஓரளவில் இலக்கியம் முதலிய சுவடி களையும், ஏடுகளையும் ஆவணங்களையும் தொகுத்தார். இன்றும் திகழும் சரசுவதி மகாலைக் கண்டார். கலை நுணுக்கமுள்ள ஓவியங்கள், பொன்னிழையால் ஆடிப்படங்கள், அருங்கலைப் பொருட்களைத் தொகுத்துள்ள அவர் கலைப்பணி பாராட்டுக்குரியது. மராத்தியர் ஆட்சி அம்மன்னருள் 13-வது மன்னரான சிவாசி என்பாரோடு முடிந்தது. முடிந்த ஆண்டு 1855.

இதுவரை,

தொன்மைச் சோழர்,

பாண்டியர்.

முத்தரையர்,

பிற்காலச் சோழர்,

களப்பிரர்,

பல்லவர்,

விசயநகர அரையர்,

நாயக்கர்,

மராத்தியர் - எனத் தமிழ் மண் மன்னரும் அயல்புல மன்னருமாக ஒன்பது மன்னர் குடியினர் ஆட்சியில் சோழநாடு இருந்தது. இது கி.மு. முதல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/103&oldid=584985" இலிருந்து மீள்விக்கப்பட்டது