பக்கம்:நாகப்பட்டினம்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 நாகபட்டினம்

நூற்றாண்டு முதல் கி.பி. 1855 வரை ஏறத்தாழ 20 நூற்றாண்டுகாலச் சோழநாட்டு ஆட்சி மன்னர் வரலாற்றுப் பட்டியல். இத்துணை நூற்றாண்டிலும் இவ்வொன்பது மன்னர் குடியினரின் கீழ் நாகை பேரூராகவும், துறைமுகப்பட்டினமாகவும் திகழ்ந்தது. -

ஒரு மன்னரும் அரண்மனை கொண்டு இடம் பெற்று ஆளாத நாகைக்கு இத்துணை விரிவான பட்டியலை விளக்க வேண்டுமா?

..... சோழராட்சியில் பேரூராக இருந்தது. எம்மன்னரும் இருந்து ஆளவில்லை; இது தலைநகரமாக இருந்ததில்லை; துறைமுகமாகவே இருந்தது என்று சுருக்கமாக முடித்திருக்கலாமே? - என்று வினா எழின் அதை ஏற்க இயலாமல் பல கருத்துக்கள் பொதிந்து நின்று மறுக்கச் சொல்கின்றன.

அப்பொதிவுகள் எவை? அவிழ்ப்போம். தாக்கங்கள்

அவிழ்த்தால் .... "நாகைக்கு நலஞ்சேர்த்த கருத்துக்கள் அதிகம் கிடைக்கா. பிற்காலச் சோழர் சிலரது போர்க்கப்பல் களம், அயல்நாட்டு வணிகத் துறை, வணிக அங்காடி, சமயக் கொடைகள், திருக்கோயில்கள் எனும் பகுதிகளில் நேர்ந்த நலன்கள் ஓரளவில் பளிச்சிடுகின்றன.

மற்றைப் பெருமளவில் பாராமுகம், புறக்கணிப்பு, ஒதுக்கல், வருவாய் உண்டியல், குத்தகைப் பொருள், மாற்று அமைப்புகள் என்னும் தாக்கங்களுக்கே நாகை ஆட்பட்டது.

நெடுமுடிக்கிள்ளி, அவன்வழிக் கிள்ளிகளின் ஆட்சிகளால் துறைமுகப் பட்டினமாயிற்று. இயல்பான வணிகத்தால் செழிப்புற்றது. இராசராச சோழன், இராசேந்திர சோழன் என்னும் இருவரால் போர்க்கப்பல்களின் கடற்களமாயிற்று.

மற்றையளவில் தாக்கங்களையே கண்டது: எதிர் கொண்டது. இவற்றிடையே நாகை தன் வணிகத்தால், துறைமுக நடப்பால், புத்த சமயத் தொடர்பால், சைவ சமயப் பெருமையால், நகரப் பெரு மக்களின் அறக்கொடைகளால், தன்னைத் தானே நில்ைநாட்டிக் காண்டு வளர்ந்துள்ளது. பிற்காலத்தே ஆலந்துக்காரர் ன்னலங்கருதிய சில ஆக்க அமைவுகளாலும், ஆங்கிலேயரது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/104&oldid=584986" இலிருந்து மீள்விக்கப்பட்டது