பக்கம்:நாகப்பட்டினம்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆட்சி நாகை 87

தன்னாட்சி கருதிய நிறுமிதங்களாலும் நலம் சூழப் பெற்றது 5τεστ8ύftιb. -

இப்பொதிவுகளை உணரவும், அறியவும் 20 நூற்றாண்டுகளின் ஆளுகை மன்னரது பெரும் பட்டியல் அடையாள அட்டையாகிறது. தமிழில்லாப் பெயர்கள்

நெட்டோட்டமாக முன்னே கண்ட மன்னர்களது பெயர்களை மீள்பார்வை இடுவீர்களாயின், ஒர் உண்மை மின்னலிடும். அது தமிழ்த் தொடர்பானது. முற்காலச் சோழ, பாண்டிய, முத்தரையர் களது பெயர்களை நோக்கின் அனைத்தும் தமிழ்ச் சொற்களால் அமைந்தவை. தொடித்தோள் செம்பியன், கரிகாலன். கிள்ளி வளவன், பெரும்பிடுகு, கடுங்கோன் முதலிய தமிழ்ச் சுவைப் பெயர்களைக் காணலாம். -

அடுத்தடுத்து வரகுணன், விசயாலயன், பராந்தகன், இராச ராசன், இராசேந்திரன், இராசகேசரி, பரகேசரி, கிருட்டிணதேவன். அச்சுதன், ஏகோசி, சரபோசி, சிவாசி என வடமொழியும் மராத்திய மொழியுமே தொடர்வதைக் காணலாம்.

பாண்டியன், சோழன் என்னும் குடிப்பெயர்களும் பையப்பைய மறைந்து நாயக்கர், இராயர், சிங்கு, சாகேபு என்னும் பிற குடிப் பெயர்கள் ஆண்டன. பத்துத் தேய்ப்பவள்

சோழன் பராந்தகன் காலத்தில் முளைத்தது தமிழரின் தாழ்வு. முதல் இராசராசன் காலத்தில் தமிழச்சி, 'பத்துத் தேய்ப்பவள்', 'சூத்திரச்சி என்னும் வழக்குப் பெயர்கள் உண்டாக அவைகள் சேரிப் பெண்டிர், தளிச்சேரிப் பெண்டிர் எனக் கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் ஆவணங்களிலும் பொறிக்கப்பட்டன. நாகைச் சீமை -

சோழர் காலத்தில் சோழநாடு ஆட்சி வகையில் பிரிக்கப்பட்ட பகுப்புப் பெயர்கள் மராத்தியர் காலத்தில் ஓரளவில் சில பகுதிகட்கு வழங்கப்பட்டன. .

மராத்தியர் தம் ஆட்சி நிலப் பகுப்பாக நாடு, மண்டலம், சீமை, வட்டம், மாகாணம், பத்து, கரை எனவும் பேருரைத் தனியூர் என்றும் தலைப்பிட்டனர். இப்பகுப்புப் பெயர்கள் உட்பிரிவு முறையில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/105&oldid=584987" இலிருந்து மீள்விக்கப்பட்டது