பக்கம்:நாகப்பட்டினம்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 நாகபட்டினம்

- இவர்கட்காகத் திருவையாற்றில் கலியான மால் என்னும் இரண்டடுக்கு மாளிகையைக் கட்டி அங்கு வைத்தார். இவர் இறந்தபோது 'கலியான மால் மகளிர் 24 பேர் இருந்தனர். (அம்மாளிகையில் இப்போது அரசர் கல்லூரி என்னும் தமிழ் - வடமொழி - இசைக் கல்லூரி நடக்கிறது) ஒருவர்க்கு ஒரே நாளில் 17 திருமணங்கள்

இவர்கள் அனைவரையும் இவ்வகையில் தோல்வியுறச் செய்தவர், மராத்திய இறுதி மன்னராகிய சிவாசி. அவருக்கு அரச மனைவியர் 20 மகளிர். கத்தி கட்டித் திருமணம் பெற்றோர் 24 மகளிர். இவர்கட்கெனத் தஞ்சைத் தெற்கு வீதியில் 'மங்கல விலாசம்' என்னும் இரண்டடுக்கு மாளிகை உள்ளது. இம்மாளிகையில் இவர்களுடன் மேலும் சேர்த்துக்கொள்ளப்பட்டோர், எடுபிடிகளாகிய சிலதிகள் என 303 மகளிர் வைப்பாட்டிகளாக இருந்ததாக (சிவாசி இறந்தபோது ஒரு மாவட்ட ஆட்சியர் குறிப்பு உள்ளது. (15) இம்மனைவியர் டட்டாளத்தைப் படைத்ததற்கு முடிசூட்டுவது போன்று சிவாசி செய்த ஒன்று தலைநடுக்கும் தருவதாகும். அஃதாவது ஒரே நாளில் 17 திருமணங்கள் செய்து கொண்டார் என்பது. இதன் முடிந்த முடிவு அவர் பெயர் சொல்ல ஒரு குழந்தையும் இல்லை என்பதே. இதனால்தான் இந்த மேல் எல்லை அளவு மகளிரைக் கூடினார்' என்று சொல்லலாம். இஃது ஒரு முலாம் பூச்சுப் பேச்சு, அதிலும் நொண்டிப் பூச்சு. குழந்தையில்லாமல் தத்து எடுத்துக்கொண்ட மராத்திய மன்னர் உளர். துக்கோசி சரபோசியைத் தத்துப் பிள்ளையாகக் கொண்டவர்.

இந்த நொண்டிப் பூச்சு போன்று வேறொரு நொண்டிப் பூச்சும் பூசலாம். மனனர்கள் இவ்வாறு பலரைக் கொள்வது எங்கும் நடப்பதுதான் என்பது அந்தப் பூச்சு. இதற்கு ஆட்படாத தமிழ் மண் மன்னர் மிகப்பலர். - திருமாவளவனும் மாதவியும்

சோழன் (திருமாவளவன்) அவையில் மாதவி கூத்தாடி அரங்கேற்றினாள். அவளுக்கு மன்னன் தலைக்கோல் மாராயம் செய்து பச்சை மரகதமாலையுடன் ஆயிரத்தெட்டுக் கழஞ்சு பொன் பரியமாக வழங்கினான். 'பரியம் என்று வழங்குவது பெண்ணுக்கு பரிசம் போடுகிறோம் என்கிறோமே அது போன்று மாதவிக்குச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/108&oldid=584990" இலிருந்து மீள்விக்கப்பட்டது