பக்கம்:நாகப்பட்டினம்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இ2, - நாகபட்டினம்

மன்னர் அரசியலும் சமுதாய வாழ்க்கையும் என்னும் நூல் (18) குறித்துள்ளது. -

இத்தண்டத்திற்கு ஆட்பட்ட நாகை வேளாண்மையரும் இருந் தனர் என்பதை ஆய்மழைக் கதை சொல்லிக் கொண்டுள்ளது. இப்படியொரு தாக்கம் நாகைக்கு. இது மட்டுமா? மராத்திய மன்னர் தம் வருவாய்க்காக நாகையைக் குத்தகைப் பொருளாக்கியதைப் பின்னர் காணலாம்.

பாராமுக நாகை - .

அதற்குமுன் நாகை மராத்திய ஆட்சியரால் பாராமுகமானதற்கு ஒர் எடுத்துக்காட்டு துக்கோசி சில குடும்ப அரசியல் காரணங்களால் தஞ்சை ஆட்சியில் ஒரு பகுதியைப் பெற்று வேறு இடத்தில் வாழ வேண்டி நேர்ந்தது. நாகையைத் தேர்ந்தெடுத்திருக்கலாம். ஆனால் மன்னார்குடி வட்டத்திலுள்ள மகாதேப்பட்டணத்தைத் தேர்ந்து, அங்குக் கோட்டை கட்டி, உள்ளே பெரிய அரண்மனை, சிறிய அரண் மனை என இரண்டு அரண்மனைகள் கட்டி அதனைத் தலைநகராகக் கொண்டார். இது நாகை பாராமுகமாக்கப்பட்டதன் ஒர் அடையாளம். ஒதுக்கப்பட்ட நாகை

நாகை ஒதுக்கப்பட்டதற்கு ஓர் அடையாளம் சாளுவ நாயக்கன் பட்டினம். இப்பட்டினம் கிருட்டிணதேவராயர் ஆட்சியில் அவர் ஆளுநரான சாளுவ நாயக்கர் பெயரில் உருவான ஊர்தான்.

சரபோசி மன்னர் தம் ஆட்சியில் இங்கு ஒரு நினைவுச் சின்னத்தை எழுப்பினார். அவர் ஆங்கிலேயர் மேல் நீங்காப் பற்றுக்கொண்டவர். அந்நாளில் உலகப்புகழ்பெற்ற போனபார்ட்டு நெப்போலியனை ஆங்கிலேயர் தோற்கடித்தனர். அந்த மகிழ்ச்சியின் நினைவாகச் சரபோசி சாளுவ நாயக்கர் பட்டினத்தில் ஒரு மனோரா எழுப்பினர். அது சிறந்ததாகக் குறிக்கப்பெறும். அங்குக் கப்பல் தளத்தையும் உருவாக்கினார். அங்கிருந்து இலங்கைக்கும் பிற கடற்கரை ஊர்களுக்கும் பாய்மரக்கப்பல்கள் வழி வணிகம் நிகழச் செய்தார். அக்காலத்தில் மராத்தியருக்கென பிரகதீசுவரர் பிரசாத், ருவாரூர் பிரசாத்' என இரு பாய்மரக் கப்பல்கள் நாகைத் |றைமுகத்தில் இருந்தன. அங்கிருந்து வணிகத்திற்கும் யன்பட்டன. அவற்றைச் சாளுவ நாயக்கன் பட்டினத்தில் அமைத்து வணிகம் நிகழச் செய்தார் சரபோசி. முன்னரே பட்டினமாக அமைந்து சிறந்த வணிக நகராகவும் திகழ்ந்த நாகையில் மனோரா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/110&oldid=584992" இலிருந்து மீள்விக்கப்பட்டது