பக்கம்:நாகப்பட்டினம்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 - நாகபட்டினம்

வந்திறங்கினார். கோழிக் கோட்டில் இடம் பெற்றார். உள் பகுதிகளையும், இலங்கையையும் சுற்றினார். இங்குள்ள வளமான சூழலை உணர்ந்து தம் நாட்டாராகிய போர்த்துகீசிய வாணிபர்களை அழைத்து வந்து கோழிக்கோட்டில் (கள்ளிக்கோட்டையில்) இறக்கினார். பின்னர் கோவாவில் இடம்பெறச் செய்தார். இம் மண்ணில் ஐரோப்பியர் கால்வைக்க வழிவகுத்தவர் இந்த வாசுக் கோடகாமாவே. போர்த்துகீசியர் தொடர்ந்து இலங்கையிலும், சோழநாட்டுக் கடற்கரை நகரங்களிலும் வாணிபராகப் புகுந்தனர். வாணிபத்தில் கால்ஊன்றி நிமிர்ந்தனர். இந்நிமிர்வால் அவ்வப் பகுதியை ஆளும் மன்னருடன் உடன்பாடு செய்து கொண்டு வணிக உரிமையைப் பெற்றனர். அதற்கு வாரக் குத்தகைக் கட்டணமாகப் பொன்னை வழங்கினார். அயல்நாட்டார்க்கு அடகு உடன்பாடு

மதுரையை ஆண்ட திருமலை நாயக்கர் போர்த்துகீசியருக்கு நாகையில் வணிகஉரிமை யளித்து 1529இல் ஒர் உடன்பாடே செய்துகொண்டார். வணிக உரிமையுடன் கிறித்துவ மதத்தைப் பரப்பும் வாய்ப்பையும் அளித்தார். -

இவ்வாறு உரிமை நாகைப் பகுதியில் நன்கு பிடிப்புப் பெற்றது. போர்த்துகீசியருக்குப் பின் நாகையில் இடம்பெற்ற ஆலந்துக்காரர் (டச்சு) காலூன்றினார். போர்த்துகீசியருக்கு இருந்த உரிமைகள் தஞ்சையை அப்போது ஆண்ட விசயநகர நாயக்கரால் ஆலந்துக் காரருக்குப் புதுப்பித்து வழங்கப்பட்டன. 1661 இல் நாயக்கருக்கும் ஆலந்து நிறுவனத்தாருக்கும் (கும்பினியாருக்கும்) ஒர் உடன்பாடு ஏற்பட்டது. இவ்வுடன்பாடு நாகையையும் நாகைப் பகுதிகளையும் நாகையைச் சூழ்ந்திருந்த ஊர்களையும் வணிக வாரத்திற்குக் கொடுப்பதாகும். இவ்வுடன்பாடு ஒரு வெள்ளித் தகட்டில் பதியப்பட்டது. இது வெள்ளிப் பட்டயம் எனப்படும். இதன் விதிப்புகள் தெலுங்கில் எழுதப்பட்டவை.

இதன்மூலம் நாகர்பட்டினத்தில் வணிகம் செய்யும் உரிமை வழங்கப்பட்டது.

நாகைப் பகுதியில் மேலக்கோட்டை வாயிலுக்குத் தெற்கேயிருந்த பொய்யூர்த் தோட்டம், வெளிப்பாளையத்திற்கு மேற்கே யிருந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/112&oldid=584994" இலிருந்து மீள்விக்கப்பட்டது