பக்கம்:நாகப்பட்டினம்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆட்சி நாகை - 95

தோட்டம் ஆகிய இரண்டையும் பயன் கொள்ளும் உரிமையும் கொடுக்கப்பட்டது. s

மேலும் நாகையைச் சுற்றியுள்ள பின்வரும் பத்து ஊர்களின் வணிக உரிமையும் வரி தண்டிப் பெறும் உரிமையும் வழங்கப் பட்டன.

அப்பத்து ஊர்கள்:

புத்துTர்.

முட்டம்,

பெருவளச்சேரி,

அந்தோணிப்பேட்டை,

கருவேப்பங்காடு,

நிருத்தன மங்கலம்,

அழிஞ்சிலா மங்கலம்,

சங்க மங்கலம்,

மஞ்சட் கொல்லை,

நரியங்குடி - - ஆகியவை. இப்பத்து ஊர்களும் செப்பேட்டில் "பழைய பத்து ஊர்கள்" என்று பழமை காட்டிக் குறிப்பிடப்படுகின்றன. இப்பத்து ஊர்களால் பெறும் பயனுக்காக ஆலந்துக்காரர் ஆண்டுக்கு 1200 பொன் வாரப் பணமாகத் தரவேண்டும். நாகை, நாகைப்பகுதிகள் பயனுக்காக ஏறத்தாழ ஆண்டுக்கு 3000 பொன் தர வேண்டும்.

நாயக்க மன்னருக்குப்பின் தஞ்சை ஆட்சியை - சோழநாட்டுப் பகுதி ஆட்சியைக் கைப்பற்றிய மராத்திய மன்னர் ஏகோசி 1676 இல் ஆலந்துக்காரருடன் ஒர் உடன்பாடு செய்து கொண்டார். வெள்ளிப் பட்டயம்

இவ்வுடன்பாடும் ஒரு வெள்ளிப்பட்டயமாகப் பதியப்பட்டது. இப்பட்டயம் ஆலந்துநாட்டு நகராகிய படேவியாவில் உள்ள அருங்காட்சியகத்தில் இருந்தது. இது காணப்பட்டு இதற்கு "படேவியா அருங்காட்சியக வெள்ளிப்பட்டயம்" என்று தலைப்பிட்டுக் கல்வெட்டுத்துறை அறிஞர் புல்வர் செ. இராசு பதிப்பித்துள்ளார்.

இவ்வெள்ளிப்பட்டயம் ஏகோசியும் டச்சு கிழக்கிந்தியக் கும்பினியாரும் அஃதாவது ஆலந்துநாட்டு வணிக நிறுவனத்தாரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/113&oldid=584995" இலிருந்து மீள்விக்கப்பட்டது