பக்கம்:நாகப்பட்டினம்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆட்சி நாகை 97

இருந்தவையே. இவற்றை மேலே கண்டுள்ளோம். அவ்வுரிமைகளை நீட்டித்து உறுதி செய்வதாகவே இப்பேச்சு நிகழ்ந்துள்ளது.

இப்பட்டயக் குறிப்பின்படி சில திங்கள்கள் ஆலந்துக்காரருடன் பினக்குற்றிருந்த ஏகோசி மன்னர் பின்னர் என்ன நெருக் கடியாலோ ஏறத்தாழ விட்டுக் கொடுத்தும், ஆட்பட்டும் இவ்வுடன்பாட்டிற்கு வந்துள்ளார் என்று உணர முடிகின்றது.

ஆலந்துக்காரர் உரிமைக்காக இப்பட்டயத்தில் பேசப்படும் இடங்கள் முன்னே கண்ட நாகர்பட்டினமும், பொய்யூர்த் தோட்டமும், வெளிப்பாளையத் தோட்டமும், நாகையைச் சுற்றியுள்ளனவாக முன் காணப்பட்ட பழைய பத்து ஊர்களுமாகும்.

நாகைத் தொடர்பில் நாணயம் அச்சடிக்கும் செயல் உரிமையும் இதில் உள்ளது. அறக்கட்டளையைப் பேணும் பொறுப்பும் வழங்கப்

இவையன்றித் தஞ்சாவூர்ச் சீமை, திருமலைராயன் பட்டினம், காரைக்கால் பகுதி உரிமைகளும் இதில் உள்ளன.

முன்னே உள்ள நாகையின் மூன்று இடங்களின் உரிமைகளால் பின்வருமாறு மராத்திய மன்னர்க்கு வருவாய் கிடைத்தது.

பத்து ஊர்களின் உரிமைப் பயனுக்காக ஆண்டுக்கு 1200 பொன், ஒரு கொம்பன் யானை. அஃதாவது தந்தம் உள்ள ஆண் யானை ஒன்று. நாகை இரண்டு தோட்டங்களுக்காக 3000 பொன். ஆக ஆண்டுக்கு 4200 பொன்னும் ஒர் ஆண் யானையும் ஆலந்து நிறுவனத்தாரால் வருவாய் பெற்றது மராத்திய அரசு. நாணயக்காரத் தெரு

நாணயம் அச்சடிப்பது 'கம்பட்டம் என்று மராத்திய மொழியில் குறிக்கப்பட்டுள்ளது. இதில் செலவு போகக் கிடைக்கும் ஊதியத்தில் ஆலந்தார்க்குப் பாதி; மன்னருக்குப் பாதி.

இவ்வருவாய்களை வைத்துத்தான் முன்னர் நாகை வருவாய் உண்டியலாகப் பயன்பட்டது என்று குறிக்கப்பட்டது. இன்றும். நாணய அச்சடிப்பின் சின்னமாக நாணயக் காரத்தெரு நாகையில் உள்ளது.

「ちrr.8.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/115&oldid=584997" இலிருந்து மீள்விக்கப்பட்டது