பக்கம்:நாகப்பட்டினம்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 {}{} நாகபட்டினம்

ஒரு வகையில் நாகையில் அன்னார் ஆட்சி நடத்தினர் என்றே கொள்ள வேண்டும். -

இது நிகழ்ந்தது கி.பி. 1500 முதல் 1658 வரை.

போர்த்துகீசியரது 158 ஆண்டுகள் நாகை ஆட்சியில் நாகைக்கு பெருநலங்கள் என்றில்லாது போயினும் ஒரு நலமாவது நிகழ்ந் திருக்க வேண்டுமே இல்லை மாறாகத் தீமைகளும் செய்தனர். வரலாற்றாசிரியர்கள் போர்த்துகீசியர் கீழைக்கடற்கரையில் பல மீனவர்களைக் கொன்றனர் என்றும், 'நாகூரில் இருந்த அரங்க நாதர் கோயிலை இடித்தனர்’ என்றும் எழுதியுள்ளனர்.

2. ஆலந்துக்காரர் (Dutchis8:12) 1658 - இல் ஆலந்துக்காரர் இலங்கையில் கால்வைத்து அங்கு ஏறத்தாழ ஆட்சி கொண்டிருந்த போர்த்துகீசியருடன் சிறு போரிட்டனர்; வென்றனர். அதே ஆண்டில் நாகை வந்தடைந்தனர். அங்கு ஆட்சிக் கால் ஊன்றி நின்ற போர்த்துகீசியருடன் சிறு போரிட் டனர். வென்றனர். அவரிடமிருந்து 23.7.1658 இல் நாகையைக் கைப்பற்றினர். வாணிபத்தைத் தொடங்கினர். வானிய உரிமையைப் போர்த்துகீசியரிடமிருந்து பறித்தனர்.

1659-இல் பீசப்பூர் சுல்தானின் படைத்தலைவன் முகம்மதிய முல்லாவும் மராத்திய சாசிபோன்ஃசலேயும் சோழநாட்டில் புகுந் தனர். தஞ்சை நாயக்க மன்னரைச் சிறு போரினால் வென்றனர். பல பகுதிகளைக் கைக்கொண்டனர். அக்காலக் கட்டத்தில் நாகையில் இடம் பெற்ற ஆலந்துக்காரருக்கு வாணிபத்தைத் தொடர இசை வளித்தனர்.

உடன் தஞ்சை விசயநகர நாயக்கரை அணுகி நாகையைக் குத்தகைக்குப் பெற்றனர். குத்தகை என்றால் சில் ஆண்டுகள் வாணிபம் செய்யும் உரிமை அதன் வழியில் வரி தண்டும் உரிமை, இவ்வாறு உரிமைபெறப் பழவேற்காட்டுத் துணிவாணிபர் மல்லைய சின்னைய செட்டி என்பார் தூண்டித் துணை நின்றார். படேவியா வெள்ளிப்பட்டயம் .

இவ்வழியாக முதலில் மூன்றாண்டுகளுக்கு உரிமைக் குத்தகை பெற்றனர். 1661 முதல் மேலும் 3 ஆண்டுகளுக்கு உரிமையை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/118&oldid=585000" இலிருந்து மீள்விக்கப்பட்டது