பக்கம்:நாகப்பட்டினம்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆட்சி நாகை - 101

நீட்டித்து, அதற்கு 5.1.1562-இல் பட்டயம் வழிப் பதிவாக்கிக் கொண்டனர். இதனைத் தெலுங்கு மொழியில் வெள்ளித்தகட்டில் பொறிக்கப்பட்ட படேவியா வெள்ளிப்பட்டயம் தெரிவிக்கிறது. போர்த்துகீசியரிடமிருந்து உரிமையை - சிற்றாட்சியைப் பறிக்கப் படையால் அடித்தனர். அதில் உறுதியாக ஊன்றிக் கொள்ள மராத்திய மன்னரைப் பணத்தால் அடித்தனர். கையூட்டு

மராத்திய சாசி மன்னர் இறப்பிற்குப் பின் சில அரண்மனைக் கீழறுப்புக்காரர்கள் அரசரின் வெள்ளாட்டி மகன் ஒருவனைக் காட்டி இவன் அரசுக்குரியவன் என்றனர். இதற்கு உடந்தையாக இருக்க நான்கயிலிருந்த ஆலந்து நிறுவனத்தார்க்குச் சில உரிமைகளைத் தருவதாகச் சொல்லிப் பணமும் பெற்றனர்.

இதனை மெக்கன்சி சுவடி "நாகப்பட்டினம் வகையறாவிலே யிருக்கப்பட்ட உலாந்தா கிட்ட கொஞ்ச திரவியமே வாங்கிக்கொண்டு சேனைகளையும் பந்தோபஸ்து பண்ணிக்கொண்டு (22) என்று காட்டுகிறது. பலவகையில் ஆலந்துக்காரர் மராட்டியரைப் பணத்தாலடித்து நாகைச் சிற்றாட்சி கொண்டதற்கு இஃது ஒருசோற்றுப்பதம். இது நிகழ்ந்தது 1736-இல், நாகையில் ஒர் ஆளுநர் அமர்ந்து ஆட்சி புரிந்தார். இடையில் 1673 முதல் 1584 வரை ஒன்பது ஆண்டுகள் ஆளுநர் அலுவலகம் நாகையில் இல்லை. இவ்வலுவலகம் மூடப்பட்டு இலங்கை ஆலந்து ஆளுநர் மேற்பார்வையில் இருந்தது. அமரால் மகாராசா

முன்னரே 1676-இல் ஏகோசியுடன் பேசி உடன்படிக்கை செய்து கொண்டதைக் கண்டோம். அதன்படி நாகையையும் முழு உரிமையாகக் கொண்டனர். அப்போது நாகைக்கும் இலங்கைக்கும் ஆலந்து வாணிப நிறுவனத்தாரின் ஆட்சியராக ஓர் ஆளுநர் இருந்தார். அவர் பெயர் நிக்களோப்பு வங்கூஞ்சு என்று படேவியாப் பட்டயத்தில் குறிக்கப்பெறும். இரீச்சிளோஃப்வான் கோயென்சு' (Signor Admiral of Van Coens)grsärusugmaust. Gourg agr-Glü பணித்தகுதி மூத்த கடற்படைத் தலைவர் என்பதாகும். இவர்தாம் நாகையின் ஆலந்து ஆட்சித் தலைவர், நாகை அரசர் என்றே சொல்ல வேண்டும். படேவியா செப்பேடும் இவரை "உத்தம

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/119&oldid=585001" இலிருந்து மீள்விக்கப்பட்டது