பக்கம்:நாகப்பட்டினம்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 - நாகபட்டினம்

சிஞ்ஞோர அமரால் மகராசா (23) என்று மாமன்னராகவே பேசுகிறது. இவர்தாம் நாகை நகரில் அமைந்த வளமனையில் அவ்வப்போது தங்கி நேரடியாக ஆட்சி செய்த முதல் ஆட்சியர்.

இவருக்குச் செயல் அமைச்சர்களாக முன்னர் குறிக்கப்பெற்ற மூத்த படைத்தலைவர் தகுதியுள்ள பிக்குருரோவர் (Bikkururoal) என்பாரும், இவருக்கு உதவியாக இளைய படைத்தலைவர் தகுதியுள்ள தாமசு வான் தெரோ (Thomas Won Dero) என்பாரும் நாகையில் நிலைத்துத் தங்கி ஆட்சி அலுவலை மேற்கொண்டனர். இவ்விருவருமே தஞ்சையை ஆண்டோரிடம் பேசி நாகையை வார உடன்பாடு செய்து கொண்டவர்கள்.

இந்த உடன்பாடு நீடித்தது. இந்த ஆளுநருக்குப் பின்னர் நமக்குக் கிடைக்கும் குறிப்புகளின் படி நாகை ஆளுநரானவர் சர் சோன்சு வான் ஃச்டிலண்டு (Siriones WanSteelant).இவர் 1702 இல் மசூலிப்பட்டினத்திலிருந்தவர். 1704 அளவில் நாகைக்கு ஆளுநராக வந்தார். ஒரு துன்பியல் மண்டபம் - இவர் தொடர்பில் ஒரு துன்பியல் செய்தியை எழுத வேண்டும். நாகையில் கடற்கரையிலிருந்து உள்ளாக ஏறத்தாழ 300 அடி தொலைவில் ஒரு கல்லறைத் தோட்டம் உள்ளது. அதில் கி.பி. 1600 த்ொடக்கமாகப் பலரது கல்லறைகள் உள்ளன. மிகப்பழமையானது போர்த்துகீசியர் கல்லறை.

அக்கல்லறைத் தோட்டத்தில் நம் பார்வையை ஈர்க்கும் ஒரு கல்லறை மண்டபம் உள்ளது. அந்த மண்டபத்துள் 3 அடி உயரம், 5 அடி நீளம், 4 அடி அகலங்கொண்ட கல்லறை மேடை உள்ளது. அந்த மேடையின் மேல் அதே நீள அகலத்தில் ஒர் அடிதடிப்பு கொண்ட ஒரு கற்பாறைக் கல்வெட்டுடன் உள்ளது. அந்தக் கல்வெட்டு ஆலந்து

டச்சு) மொழியில் புடைப்பு எழுத்துக்களால் ஆன்து.

இக்கல்வெட்டுப் பாறை போன்று பலப்பல கீழை நாடுகளில் காணப்படுகின்றன. மலாக்காவில் மிகப்பழைய ஒரு திருச்சபைக் கோயிலில் இத்தகைய கல்வெட்டுப்பாறைகள் பார்வைக்காகச் சார்த்தி வைக்கப்பட்டுள்ளன. இக்கோயில் இப்போது சிதைந்த நிலையில் உள்ளது. இவற்றை யான் மலைநாடு சென்றபோது (1966) கண்டேன். இவ்வகையானவை மேலை நாடுகளில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/120&oldid=585002" இலிருந்து மீள்விக்கப்பட்டது