பக்கம்:நாகப்பட்டினம்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10莹 - நாகபட்டினம்

அம்மணமாக நிற்பதும் உள்ளன. அவள் ஆடை இடுப்பிலிருந்து அவளது வலப்பக்கமாக வளைந்து தலைக்கு உயரே வளைந்து இடப்பக்கம் தொங்குகின்றது. -

கல்லறைமேல் ஒரு மண்டபம் 15 அடி முகடு உயரத்தில் எழுப்பப்பட்டுள்ளது. மண்டபம் நான்கு புறமும் மேல் வளைவு வாயில்களைக் கொண்டது. மண்டபக் கூரை கவிழ்ந்த குடை வடிவில் மேலே கலயக் கூம்பு கொண்டு காட்சியளிக்கிறது. குடை வடிவத்தின் அடிப்புறத்தில் நான்கு புறங்களிலும் மேலே கண்ட பெண் சிற்பம் சுண்ணாம்புச் சுதையால் புடைப்புச் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது. -

நகரில் பழைய பேருந்து நிலையத்தை ஒட்டி வடக்கில் உள்ள தென்னிந்தியத் திருச்சபைக் கோயிலின் உள்ளே ஓர் உயரமான மரமேடை அமைக்கப்பட்டு அதிலும் மேற்கண்ட சிற்பம் மரத்தில் புடைப்புச் சிற்பமாக வைக்கப்பட்டுள்ளது. செவிவழிக் கதை

மொத்தத்தில் இச்சிற்பம் பற்றியும் இதில் பொதிந்த கதையாக வழங்கப்படும் செவிவழிச் செய்திகளாகவும் யான் அறிந்தவை இவை:

"நாகையில் இருந்த ஆலந்து ஆளுநர் ஒருவரது மனைவி கப்பலில் வந்து இறங்கும் போது தவறி விழுந்து கம்பி ஒன்று வயிற்றில் பாய்ந்ததால் குடல் வெளிவந்து இறந்தாள். (அலைகள், படகு, கப்பலில் வந்து இறங்கியதன் அறிகுறி: இடுப்பிலிருந்து மேல் நோக்கி வளைந்தது வெளிவந்த குடலின் அறிகுறி.) அதன் அறிகுறிதான் இப்புடைப்புச் சிற்பங்களாக உள்ளன. இறந்த அம்மையாரின் உடல் இக்கல்லறையில் உள்ளது. நிலத்தடியில் ஒர் அறை அமைப்பாகச் சுற்றிலும் பாறைக் கற் சுவர்கள் அமைக்கப்பட்டுள்ளன. அறைக்குள் ஒர் ஊஞ்சல் அமைத்து அதில் பெட்டியுள் அம்மையாரின் உடல், அவர் அணிந்திருந்த பொன், மணி, வைர அணிகலன்கள் பூணப்பட்டதாக வைக்கப்பட்டுள்ளது".

இது பல்லாண்டுகளாக வழங்கப்படும் ஒரு கமுக்கமான கதை. இங்கு அம்மையாரின் நினைவுக் காணிக்கையாகத்தான் திருச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/122&oldid=585004" இலிருந்து மீள்விக்கப்பட்டது