பக்கம்:நாகப்பட்டினம்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆட்சி நாகை 111

இந்த ஆளுநர்கால மராத்தியர் ஆட்சி மராத்திய மன்னர் சகசி (1684-1711) யின் பிற்பகுதியும் முதல் சரபோசியின் (1711-1729) முற்பகுதியுமாகும். சிவன் கோயிலுக்கு ஆலந்தர் அறச்செயல் - இவரைத் தொடர்ந்து ரெயினியா வான் சிங்கா ஆளுநரானார். - இவர் பெயரிலுள்ள வான் என்பது குடிப்பெயர். எனவே, இவர் முன்னிருந்த வான் ஃச்டிலண்டின் குடியினர் என்று கொள்ள வேண்டும். அவர் பரிந்துரையால் அல்லது செல்வாக்கால் பதவி பெற்றிருக்க வேண்டும்.

இவர் நாகைக் கோவில்களுக்கு உடைமையான சில இடங்களைத் தம் அலுவற் பயன்பாட்டிற்கு எடுத்துக் கொண்டு அதற்கு ஈடாகச் சில கோயில்களுக்குச் சில அறங்களைச் செய்தார். அவற்றுள் இவர் விரும்பிச் செய்தது நாகை நகர நடுவில் உள்ள கைலாசநாதர் கோவில் என்னும் மலையீசுவரன் கோயிலைப் புதுப்பித்ததாகும். இவர் செய்த இப்பணி இக்கோவில் கல்வெட்டிலும் பொறிக்கப் பட்டுள்ளது. அதன்படி இது 1771 இல் நிகழ்ந்தது. கிழக்கிந்திய வணிக நிறுவனங்கள்

ஐரோப்பியப் பிரித்தானியர் இந்தியாவில் கிழக்கிந்திய வணிக நிறுவனமாகப் புகுந்தது முதலாக வணிகத்துடன் சமயத்தையும் புகுத்தினர். மெல்ல மெல்லக் காலூன்றி ஆட்சி அலுவல்களிலும் புகுந்தனர்; இடம் பெற்றனர். ஆங்காங்கு வணிக உரிமையும் ஆட்சி உரிமையும் பெற்றிருந்த பிற ஐரோப்பியருடன் உடன்பாடு செய்தும் சிறு பூசல்களால் கைப்பற்றியும் தம் வலிமையைப் பெருக்கினர்.

இவர்கள் குறியில் ஆலந்துக்காரர் இடம் பெற்றனர். சிறுசிறு பூசல்கள் விளைந்தன. இக்காலக் கட்டத்தில் (1652-1674) ஐரோப்பாவிலும் இங்கிலாந்திலும் ஆலந்துக்காரரின் வலிமை குலையலாயிற்று. ஆங்கிலேயரும் பிரெஞ்சுக்காரரும் ஆங்காங்கு வென்றனர். ஆனால் 1746 இல் பிரெஞ்சுக்காரருக்கும் ஆங்கி லேயருக்கும் நாகர்பட்டினம் கடற்பகுதியில் ஒரு போர் நிகழ்ந்தது. இதில் ஆங்கிலேயர் வென்றனர். 1824 இல் ஆலந்தார்க்கும் ஆங்கிலேயர்க்கும் ஒர் இறுதி உடன்பாடு நேர்ந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/129&oldid=585011" இலிருந்து மீள்விக்கப்பட்டது