பக்கம்:நாகப்பட்டினம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
இந்நூல் காட்டும் இருபத்துமூன்று ஆய்வு உண்மைகள்

1. 'நாகர்பட்டினம்' என்பது இதன் பட்டினப் பெயர்.

2. சங்ககாலப் பெயர் 'நீர்ப்பெயற்று' என்பது.

3. நாகர்பட்டினத்தின் நகரமைப்பு காவிரிப்பூம்பட்டினத்தின் மறுபதிப்பாகும்.

4. நாகர் - தமிழ்ச் சொல்.

5. நாகர் என்பார் மூலத்தில் தமிழ் இனத்தவர்.

6. நாகர்பட்டினம் ஆட்சித் தலைநகராக இருந்ததில்லை; துறைமுகப்பட்டினமே.

7. நாகையின் சுற்றுப் பாதுகாப்பாகக் கோட்டை இருந்ததில்லை. மேலைக் கோட்டை வாயில், வடக்குக் கோட்டை வாயில் என்பன நுழைவாயில் வளைவுக் கட்டுமான தோரன வாயில்களே.

8. நகரத்தின் நடுவே 'சிந்தாறு' என்றொரு ஆறு ஓடியது. பின் திசை திருப்பப்பெற்றது.

9. நாகையில் புத்தத் துறவிகள் நூல் பணியே செய்து அமைதியில் வாழ்ந்தனர். மதம் பரப்பும் பணி ஆற்றவில்லை. நகர மாந்தர்தம் ஒத்துழைப்போ பகைமையோ கொண்டதில்லை.

10. கி.பி. 10ஆம் நூற்றாண்டிலேயே இங்கு இயற்கை எரிவாயு (Natural Gas) வெளிப்பாடு நேர்ந்தது.

11. புகையுண்ணிக் கிணறு என்பது எரிவாயு (Gas) தோன்றி உள்வாங்கிக் கொள்ளப்பட்ட கிணறு ஆகும்.

12. 'காரோணர்' என்பதே உரியபெயர். 'காயாரோகணர்' என்பதன் திரிபு அன்று.

13. சோழ மன்னர் ஆட்சியில்தான் நாகை வளம் பெற்றது.

14. சாலிசுகன் என்றொரு மன்னன் பெயர் வரலாற்றில் இல்லை.

15. மராத்தியர் காலத்தில் நாகை அவர்க்கு ஒரு வருவாய் உண்டியலாக இருந்தது.

16. 'புதுவெளிக் கோபுரம்' என்பது நாகை அகநகரின் வெளி யிடத்தில் அமைந்த புத்த சமயக் கோபுரம். இது கலங்கரை விளக்கமாக எழுப்பப்பட்டதன்று. அவ்வாறு துணையாயிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/13&oldid=518302" இலிருந்து மீள்விக்கப்பட்டது