பக்கம்:நாகப்பட்டினம்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 நாகபட்டினம்

நகராட்சித் தலைவர்களைக் கொண்ட நகராட்சி ஆளுகை அமைந்துள்ளது. - -

நாகையின் சுற்றுப்புறச் சிற்றுார்களுக்கு இதுபோன்றே ஊராட்சி மன்றங்கள் அமைந்து அவற்றின் ஒன்றியமாக நாகை ஊராட்சி ஒன்றியம் அமைந்தது. 戏 ஆங்கில ஆட்சி நன்மைகள் .

வணிக வழியாக இந்திய மக்களைச் சுரண்டத் தொடங்கிய வெள்ளையர் அடக்குமுறை ஆட்சியாலும் சுரண்டினர். அதனால் அன்னாரைச் சோப்பு சீப்பு விற்க வந்தவன் கோப்பு வைத்து ஆளத்தொடங்கினான் என்றனர்.

ஆனால் வெளிநாட்டார் ஆட்சியில் எந்த நன்மையும் காணாத இந்தியா - சென்னை - தஞ்சை - நாகை அனைத்தும் ஆங்கிலர் ஆட்சியில் பல நிலைத்த நன்மைகளைப் பெற்றன என்று கட்டாயம் குறிக்கவேண்டும்.

இந்தியச் செல்வத்தை வாரிய வெள்ளையர் மதத் தலைவர் களாம் பாதிரிமார்களை அனுப்பி, கல்வி நிலையங்கள் கண்டும், மருத்துவ மனைகள் திறந்தும் உதவினர். •

இடையே ஒன்றைக் குறிக்க வேண்டும். உலகின் மேலைப் பகுதியில் பல்வகை ஐரோப்பிய இனத்தார் உள்ளனர். அனைவரும் ஒரே குணத்தினர் என்று எழுத முடியாது.

இங்கிலாந்து ஒரு தனித்தீவு. உலகப் பண்பாட்டிலும் அஃதொரு தனித்தன்மை கொண்டது. மரபுகளைக் காத்தல், மற்றவரை மதித்தல், அறிமுகம் பெற்று மகிழ்தல், தாழ்ந்தார் உயர்வதைப் பார்த்து இன்புறுதல் முதலியவற்றில் குறிப்பிடத்தக்கவர்கள்.

இத்தகைய பண்புகளே இந்திய நாட்டில் ஆட்சியை ஊன்றிய போதும் மக்கள் வாழ்வுத்துணைகள் பலவற்றை உருவாக்கின எனலாம்.

போக்குவரத்து நன்மை

ஆங்கில ஆட்சிதான் போக்குவரத்திற்குப் புகைவண்டித் தடங்களை உண்டாக்கியது. செய்திப் போக்குவரத்திற்கு அஞ்சல் முறையைத் திறந்தது. வளர்ந்துள்ள பிறவற்றை நாம் அறிவோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/134&oldid=585016" இலிருந்து மீள்விக்கப்பட்டது