பக்கம்:நாகப்பட்டினம்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11.8 - - நாகபட்டினம்

இருப்பினும் ஆங்கிலர் இந்தியரை - தமிழரை - நாகையரைத் தம் பண்ணைக்குட்பட்ட அடிமைகளாகவே கருதினர். கருப்பராகவே கருதினர். அடங்கியிருக்க வேண்டியவர்கள் என்று நடத்தினர். தன்னுரிமை என்று எதையும் தந்து விடவில்லை.

மக்களும் ஆங்கிலரை உயர்ந்தவராகவே கருதினர்; அவர் பார்வைபட்டால் பூரித்தனர்; பேசினால் பேறாகக் கருதினர். துரைதுரைசானி என்றே அழைத்தனர். அடிமைகளாகவே கருதப்பட்ட நிலையில் மக்கள் உணர்வு முளைத்தது. இந்திய தேசிய காங்கிரசு உருவாகியது. அதனை ஒரு இயூம் என்ற வெள்ளையரும் சேர்ந்து உருவாக்கினார் என்பது ஒரு குறிப்பிடற்குரியது தான்.

வானம் பொழிகிறது; பூமி விளைகிறது; உனக்கேன் காணிக்கை என்றார் கட்டபொம்மன்.

‘விடுதலை எமது பிறப்புரிமை என்றார் திலகர் தாமிருக்கும் நாடு தமதென்பதறிந்தார் LDಹಿಹ6T: வெள்ளையனே வெளியேறு என்றார் காந்தியடிகள். வெள்ளையனே வெளியேறு

1942 இல் வெள்ளையனே வெளியேறு ஒர் இயக்கமாக எழுச்சி யுற்றது. 1947 ஆகட்டில் புரட்சியாகவே வெடித்தது. வெள்ளையர் ஆட்சி தானாகவே வெளியேறியது.

1947 ஆகட்டு 15இல் இந்தியாவில் இந்தியர் விடுதலை ஒளிவிட்டது. வழிவிட்ட ஆங்கிலேயர் ஆட்சி முடிவுற்றது.

கி.பி. 1612 முதல் 1858 வரை 246 ஆண்டுகள் இந்தியாவும் அதனுட்பட்ட நாகையும் பிரித்தானியக் கிழக்கிந்திய வணிக நிறுவன ஆட்சிப்பிடியிலும் 1858 முதல் 1942 வரை 84 ஆண்டுகள் பிரித்தானிய அரசின் அழுத்தத்திலும் இருந்த இந்திய மக்கள் விடுதலை பெற்றனர்.

330 ஆண்டுகால ஆங்கிலர் ஆட்சி பின்வாங்கி மறைந்தது. "வெள்ளைப் பரங்கியைத் துரை என்ற காலமும் போயிற்று: நாமிருக்கும் நாடு நமக்கே உரிமையாயிற்று". ஆளுவோரை நம் நாட்டினராகவே தேர்ந்தெடுக்கும் உரிமை பெற்றனர் நம் மக்கள். தமக்காகத் தமது அமைச்சர்களாகவும், தமது படைத்தலைவர் ளாகவும். தமது அலுவலர்களாகவும் தமது காவலர்களாகவும், தமது னியாளர்களாகவும் இந்திய மக்கள்- நம் நாகை மக்களும் பெற்று ன்னராயினர். எல்லாரும் இந்நாட்டு மன்னராயினர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/136&oldid=585018" இலிருந்து மீள்விக்கப்பட்டது