பக்கம்:நாகப்பட்டினம்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஊ. விடுதலைத் தன்னாட்சி - 1950

விடுதலை நாகை

இந்திய விடுதலையால் நாகை பல்வேறு பொருத்தமற்ற ஆட்சிகளினின்றும் வேறுபட்ட ஆட்சியில் அமைந்தது.

1950 சனவரி 26 இல் இந்தியாவில் தகுதியான தன்னாட்சி அமைந்தது.

முதல் ஆட்சித் தலைவராக நமக்கொரு சக்கரவர்த்தி அமர்ந்தார். ஆம் நம் நாட்டுச் சக்கரவர்த்தி அமைந்தார். அதிலும் நம் தமிழ்நாட்டுச் சக்கரவர்த்தி கிடைத்தார். ஆம் சேலத்துச் சக்கரவர்த்தி இராசகோபாலாச்சாரியார் பொறுப்பேற்றார். முதல் குடியரசுத் தலைவராக ஒர் அரசர் அமர்ந்தார். அரசனை வடமொழியார் இந்திரன் என்றும் குறிப்பர். ஆம் இந்திரனைக் குறிக்கும் பிரசாதகன் என்னும் பிரசாத் குடிப்பெயர் கொண்டவர், முதல் குடியரசுத் தலைவரானார். அவரும் நம் தமிழ் நாட்டுச் சோழ அரசன் பெயர் பெற்ற இராசேந்திரப் பிரசாத்.

இந்தியக் குடியரசுத் தலைவரின் தலைமையில் பண்டித சவர்கலால் நேருவின் தலைமை அமைச்சர் ஆட்சியில் இந்தியா - நாகை முடிசூடியது. தொடர்ந்து பல குடியரசுத் தலைவர் தலைமை அமைச்சர்கள் ஆட்சியில் - சென்னை மாநிலத்து ஆளுநர்கள் - முதலமைச்சர்கள் ஆட்சியில் நாகை வளர்ந்தது.

அரசியல் கட்சி ஆட்சி

ஆங்கிலர் ஆட்சியில் 1919இல் நேர்ந்த மாண்டேகு சட்டத்தின்படி மாநிலங்களில் தேர்தல் நடத்தப்பட்டு ஆங்கிலர் பிடிப்புடன் கூடிய சட்ட மன்றங்கள் அமைந்தன. சென்னையிலும் சட்ட மன்ற வழி ஆளுநர் ஆட்சி நிகழ்ந்தது. -

இவ்வாட்சியில் ஆங்கிலர் தம் சார்பானவர்களையே ஆட்சியில் புகுத்தி அமர்த்தினர். பார்ப்பனர் மிக இடம் பெற்றனர். இதனால் 1920 இல் பார்ப்பனல்லாதார் அரசியல் கட்சியாக நீதிக்கட்சி" (Justice Party) தொடங்கப்பட்டது. இக்கட்சி தேர்தலில் நின்று அதிக இடம்பெற்று ஆட்சி அமைத்தது. இஃது தமிழ்நாட்டின் முதல் அரசியல் கட்சி ஆட்சி. இக்கட்சி ஆட்சியில் பார்ப்பனரல்லாதார்க்குப் பல

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/137&oldid=585019" இலிருந்து மீள்விக்கப்பட்டது