பக்கம்:நாகப்பட்டினம்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 - நாகபட்டினம்

அகரம் (அக்கரகாரம்) எனப்பெற்றது. அகரம் என்றால் தங்கும் இடம் என்பது பொருள். இஃதே 'அக்ரகாரம் எனப்படுகின்றது. இந்த 'அக்கரையகரம் பார்ப்பனர் சேர்ந்து வாழ்ந்ததால் 'பார்ப்பனச்சேரி: எனப்பட்டது. இன்றும் வழக்கில் உள்ளது. இந்த இனப்பெயரை விரும்பாதோர் இப்போது அங்கு பார்ப்பனர் வாழாமையால் அப்பெயரை மாற்றி, பால்பண்ணைச் சேரி என்று வழங்கப் பார்க்கின்றனர். (பால் பண்ணை ஏதும் அங்கிருந்த தில்லை) சேர்ந்து வாழும் இடம் சேரி எனப்படுவது முற்கால வழக்கு. எவர் வாழினும் சேரியே. பிற்காலத்தில் தாழ்த்தப்பட்டோர் வாழிடமாக மட்டும் கருதப்பட்டது. சற்றுத் தாழ்வாகவும் எண்ணப்படுவதுண்டு. பார்ப்பனர் வாழ்ந்த தெருவைப் பெருங்கதை ஆசிரியர் கொங்குவேளிர், "அந்தணர் சேரி அகவிதழார்" (3) என்று பாடினார். பார்ப்பனர் சேர்ந்து வாழும் தெருவிற்கும் சேரி எனப் பெயரமைந்தமை பழங்கால வழக்காதலால் நாகைச் சிந்தாற்றங் கரைப் பார்ப்பனச் சேரி தொன்மையானது என்பதையும் உணரவேண்டும். -

நாகையின் தொன்மையான ஆற்றங்கரையில் பார்ப்பனச்சேரி அமைந்ததற்குப் பெரும்பாணாற்றுப்படை சான்று தருகிறது. அதனை அடுத்துப் பார்க்க உள்ளோம். நாகையில் காவிரியாறு

ஆறு ஓடியதற்கு மற்றொரு சான்று. சோழகாசடர் என்னும் புத்தத் துறவியார் மோகவிச்சேதனி என்னும் நூலைப் பாளி மொழியில் எழுதியவர். அந்நூலின் குறிப்பில் அவர்,

"காசபதேவர் காவிரியாறு பாயும் நாக நகரத்தில் நாகானன விகாரையில் தங்கினார்" - என்று குறிக்கப்படுகிறார். இதில் குறிக்கப்பெற்ற நாக நகரம்' நாகர்பட்டினமாகும். இதற்கு நாகர் இட்ட பெயர் நாகானனம் என்பது. இதன்படி தொன்மை நாகையில் காவிரியாறு பாய்ந்ததா?

இக்காசபுதேவர் சோழ காசபதேவர் என்று சிறப்பிக்கப் பெற்றவர். எனவே சோழ நாட்டவர். - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/146&oldid=585028" இலிருந்து மீள்விக்கப்பட்டது