பக்கம்:நாகப்பட்டினம்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

蓝34 நாகபட்டினம்

இவ்வகையில் மட்டுமின்றி இலங்கைலிருந்து புகார் வந்த புத்தத் துறவிகள் நீர்ப்பெயற்றெல்லை என்று நாம் கண்ட பரவையில் கடற்சுழலில் சிக்கிக் கரையேறினோரும் இந்த இலந்தை மரக் களத்தை அடைந்துள்ளதைக் கண்ட்ோம். இவ்வாறு புத்தத் துறவிகள் இட அமைப்பால் "நீர்ப்பெயற்று" விரிவடைந்தது. அசோகப் பெரு மன்னன் புத்தத்துறவிகளுக்காக ஒரு புத்தப்பள்ளியை எழுப்பி னான். அது ஆதிவிகாரை எனக் கண்டோம். இதனால் மேலும் ஊர்க்கு ஒரு விரிவாக்கம் நேர்ந்தது.

கீழை நாடுகளிலிருந்து புகார் வரும் வணிகர்களும், புத்த வழிபாட்டாரும் நீர்ப்பெயற்றுக் கடற்கரையில் இறங்கித் தங்கிச் சென்றனர். நாகநாட்டவர் மிகுதியாக வந்ததைக் கண்டோம், இவ்வகையில் புத்த அமைப்புகளால் ஊர் பேரூராக அமைப்புற்றது.

தோற்றமான ஊரின் வடக்கே பதரி திட்டையால் விரிவாக்கமும், கிழக்கே கடற்கரையில் அவ்வப்போது பாடிவீடுகள், தங்கும் இடங்கள் அமைந்ததால் விரிவாக்கமும் கூடின. ஆற்றங்கரையின் தெற்குப் பகுதியிலும் நிலவழியாக வந்தவர்தம் குடியிருப்புகளும், வணிகர் களின் நிலையங்களும் கூடின. இவற்றால் வளமுள்ள மக்களின் மனைகள், நல்லில்லங்கள் அமைந்து சற்றுச் செல்வ வளமும் தோன்றலாயிற்று. - १

பெரும்பாலும் இவ்வளர்ச்சியும் விரிவாக்கமும் செல்வ வளத் தோற்றமும் மக்கள் பெருக்கமும் முன்னர் நாம் கண்ட நீர்ப்பெயற்று' ஊர் தோன்றிய காலக்கட்ட அளவோடு நிகழ்ந்ததாகவே கொள்ள வேண்டும். -

நீர்ப்பெயற்று மறைந்தது -

புத்தத் துறவிகளது அமைப்பால் நேர்ந்த வளர்ச்சியால் இப்பகுதி அவர்கள் இருப்பிடத்தைக் குறிக்கும் வகையில் பதரிதிட்டா என்ற வழக்கு பெருகியது. வெளிப்புறப் புத்தத்துறவிகளும், மதம் சார்ந்தவர்களும் இவ்விடத்தைப் பதரி திட்டா என்றே வழங்கினர்.

இதனால் காலப்போக்கில் நீர்ப்பெயற்று என்னும் ஊர்ப்பெயர் பையப்பைய மறைய, பதரிதிட்டா என்னும் பெயரே வழக்காயிற்று. புத்த சமயப் பதரி திட்டா தமிழ் நிலத்து நீர்ப் பெயற்றுப் பெயரை மறைத்தது. பாளி மொழிச்சொல் தமிழ்ச் சொல்லை விழுங்கியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/152&oldid=585034" இலிருந்து மீள்விக்கப்பட்டது