பக்கம்:நாகப்பட்டினம்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

፲38 நாகபட்டினம்

நிலப்படத்தின் நடுக்கோட்டின் வடக்கிலும் தெற்கிலும், கிழக்கு மேற்காக வரையப்பட்ட அளவீட்டுக் கோடு நில - நீளக்கோடு: (Longitude) எனப்படும். வடக்கு தெற்காக வரையப்பெற்ற கோடு (Lalitude)அளவீட்டுக்கோடு நில அகலக் கோடு எனப்படும்.

இக்கோடுகளிட்டு அவர் அமைத்த உலக நிலப்படத்தில் நாகர்பட்டினம் நிலநீளக்கோடு 10.46%உம் நில அகலக்கோடு 79.53"உம் கூடும் இடத்தில் அமைந்துள்ளதாகக் குறித்துள்ளார். இக்கால நிலக்கோடுகள் சற்று வேறுபட்டுள்ளன. இந்நாளில் அந்த அளவு சற்று கூடுதல் கொள்கிறது. இதன்படி நிலநீளக்கோட்டில் 20° சுட்டிக்கொள்ள வேண்டும். அகலக்கோட்டில் 6° கூட்டிக்கொள்ள வேண்டும்.

துறைமுகமாக உருப்பெற்ற அந்நாள் நாகர்பட்டினம் உலக அளவில் குறிக்கப்பெறும் தகுதியும் பெற்றது.

இத்தகுதிபெற்ற அமைப்பு நாகர்பட்டின நகரமைப்பின் மூன்றாவது கட்டமாகும். இதன் காலகட்டம் கி.பி. முதல் நூற்றாண்டி லிருந்து நான்காம் நூற்றாண்டு வரை எனலாம்.

உ. உலகக் கண்ணாடி "பொன்னி நாடெனும் கற்பகப் பூங்கொடி மலர்போல் நன்மை சான்றது நாகபட் டினத்திரு நகரம்" (8) - என்று சேக்கிழார் சிறப்பித்துப் பாடும் நிலைமை நான்காவது கட்ட நாகை நகரமைப்பை எய்தியது.

இக்கட்ட நகரமைப்பு நீண்ட நெடுங்கால அளவு கொண்டது. இ.பி. 5ஆம் நூற்றாண்டு முதல் 13ஆம் நூற்றாண்டு வரை 1100 ஆண்டுக்காலம் கொண்டது. சற்றுச் சற்றாக, பெரிதும் திட்டமிடப் படாமல் வளர்ச்சியாக இக்காலக்கட்டத்தில் நகர் விரிவாக்கங்கள் பெற்று வளர்ந்தது. இஃது ஒரு வரலாற்றுச் சிறப்பாகும்.

ஓரளவில் பட்டினமாக அமைந்த நாகர்பட்டினம் சோழநாடு என்னும் "கற்பகப் பூங்கொடியின் மலராக" மலர்ந்தது சிறப்பிற் குரியதே.

இவ்விரிவாக்கம் இரண்டு மாற்றங்களால் ஏற்பட்டது எனலாம். ஒன்று சிந்தாற்றின் ஒட்டப் பாதை மாற்றம் மற்றொன்று சமயத்தால் நேர்ந்த மாற்றம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/156&oldid=585037" இலிருந்து மீள்விக்கப்பட்டது