பக்கம்:நாகப்பட்டினம்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நகரமைப்பு நாகை . 1 39

முன்னர் கண்டபடி ஆறாம் நூற்றாண்டின் முற்பகுதியில் சிந்தாற்று மாற்றம் நேர்ந்தது. இது களப்பிரர் ஆட்சிக்காலத்தில் நிகழ்ந்தது. மாற்றமாக ஆறு எப்புறம் திருப்பிவிடப்பெற்றது? .

நகரின் மேற்கெல்லை நடுப்பகுதியில் இத்திருப்பம் அமைந்தது. முன்னர் குறித்த பிற்காலத்தில் தோன்றிய சிந்தாற்றுப் பிள்ளையார் கோயில் இடத்தில் கிழக்கே பாய்ந்த ஆறு த்ெற்கு நோக்கித்திருப்பப் பெற்றது. அவ்வோட்டம் நகரின் தென்மேற்கு எல்லைவரை அமைந்து அங்கிருந்து கிழக்குநோக்கித் திருப்பப் பெற்றது. இத்திருப்பம் அமைந்த தொடக்க இடத்தில் ஆற்றின் மேல்கரைப் பகுதியில் இடைக்காலத்தில் ஒரு குளம் அமைந்தது. அது திருப்பிவிடப்பெற்ற ஆற்றின் (ஊர்க்கு) அக்கரையில் அமைந்தது. இன்றும் அக்குளம் 'அக்கரைக்குளம் எனப்படுகின்றது.

மேற்குறித்த தென்மேற்கு மூலையிலிருந்து கிழக்கே ஒட்டம் பெற்ற ஆறு முன்னர் ஓடிக்கொண்டிருந்த பெரு வாய்க்கால் போன்ற உப்பனாற்றுடன் இணைக்கப் பெற்றது. தொடர்ந்து கலவையான இரண்டும் ஒன்றாய்க் கடற்கரைக்குச் சற்று தொலைவு வரை ஒடி, பின் வடக்கு நோக்கித் திரும்பி, கடற்கரைச் சாய்வில் பாய்ந்து கடலில் கலந்தது. இஃதே இன்றுள்ள நிலையாகவும் உள்ளது. இவ்வாறு வடக்கே நோக்கித் திரும்பிய ஆற்றின் கிழக்குக் கரையில் கடலுக்கும் ஆற்றுக்கும் இடை அமைந்த வணிகப்பெட்டை 'அக்கரைப்பேட்டை எனப்படுகின்றது. புராணக் காவிரி

இந்த நூற்றாண்டளவில்தான் வடமொழியில் தமிழ்நாட்டுக் கோயில்களுக்குத் தலபுராணங்கள் எழுந்தன. நிகழ்ச்சிகள் யாவும் தலபுராணங்களில் கடவுள் அருள் வழங்கலாகவே அமையும். கட்டுக்கோப்பான கற்பனைகள் இடம்பெறும். கடவுளுணர்வைப் பெருக்கி, அருள்பெறும் ஆர்வத்தை மூட்டும். இவற்றைத் தமிழில் பாடினோர் அவ்வவ்வூர் நிகழ்ச்சிகளையும் ஒரளவில் அமைப்புக் களையும் ஊடே காட்டுவர். இவ்வகையில் நாகைத் தலபுராணங்கள் சிந்தாறு மாற்றப்பட்டு ஓடியதற்குரிய செய்திகளைத் தருகின்றன. ஆனால் சிந்தாறு" என்று குறிக்காமல் காவிரி என்று குறித்தன.

நாகை, காரோன புராணத்தை எழுதிய பிள்ளையவர்கள் நகரப்படலத்தில் ஆறு ஓடியதாகக் காட்டவில்லை. ஆனால் மற்றோர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/157&oldid=585038" இலிருந்து மீள்விக்கப்பட்டது