பக்கம்:நாகப்பட்டினம்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

氮强2 நாகபட்டினம்

அன்னார் துணையும் கிட்டியிருக்கும். இவ்வகைப் பெருக்கத்தால், நாகை நகரம் ஒரு புத்த வழிபாட்டுத் திருவிடமாகத் திகழாலாயிற்று.

பதரி திட்டையின் மேற்குப் பகுதியிலும் வடக்கிலும் புத்தக்களம் பரந்தது. மேற்குப் பகுதியில் ஒரு கோபுரம் எழுந்தது. இவ்வாறு ஒரு விரிவாக்கம் நேர்ந்தது. இது பழைய வெளிக்கோபுரம்.

ஐந்தாம் நூற்றாண்டின் இறுதிவரை நாகை நகரத்தில் சைவ சமயம் இடம் கொண்டிருந்தது என்னும் அளவிற்கே அமைவு பெற்றிருந்தது, பூம்புகாரில் பிறவாயாக்கைப் பெரியோனாகிய சிவபெருமான் கோயிலும் பிற கடவுளரின் - தெய்வங்களின் கோட்டங்களும் இருந்தன. அதன் அழிவிற்குப் பின்னர் அங்கிருந்த சைவ அடியாரும், அன்பரும் நாகையில் குடிகொண்டு சைவக் கோயில்களை எழுப்ப முனைந்திருப்பர்.

சைவக் கோயில்களின் தோற்றம் பற்றிய பொதுக்கருத்தை இங்குத் தரவேண்டும். அப்படித் தருவது இன்றியமையாததுமாகும்.

சைவ சமயம் தமிழ் மண்ணின் உரிமைச் சமயம். தாய்மையும், உண்மையும் பொதிந்த வழிபாட்டு வழி கொண்டது. அனைத்து வகை இம்மண் மக்களாலும் கொள்ளப்படும் அளவு தமிழ்மொழி கொண்ட சமயம். குறிப்பாகச் சொன்னால் மக்கள் சமயம். இதன் இறையுருவமும் போற்றுதலும் தமிழ் மரபின் அடித்தளத்தில் எழுந்தவை. பள்ளிப்படையே கோயில்

தமிழர் போரில் இறந்த வீரர்க்கும், சான்றோர்க்கும் அவர் அடக்கம் செய்யப்பெற்ற இடத்தில் நினைவாகக் கல் நட்டனர். அது நடுகல் எனப்படும். அதற்கு வீரரின் இல்லாள், உறவினர், சான்றோர், அணுக்கர், அயலார் வணக்கம் செலுத்தி வழிபாடும் செய்யத் தொடங்கினர்.

"கல்லே பரவின் அல்லது

நெல்லுகுத்துப் பரவும் கடவுளும் இலவே" (12) என்னும் அடிகளும் இதனைக் காட்டும். அரசர் இறந்து அடக்கம் செய்யப்பெற்ற களமும் நடுகல் களமாயிற்று. அரசர் நடுகல் இடம் அவரின் நினைவுச் சின்னமாகக் கட்டடம் எழுப்பப்பெற்று இது பள்ளிப்படை எனப்பெற்றது. இறந்தவர் நீடு துயில் கொள்ளும் படுக்கை (பள்ளி) உண்டான (பட்ட) இடம் என்னும் பொருள் கொண்டது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/160&oldid=585041" இலிருந்து மீள்விக்கப்பட்டது