பக்கம்:நாகப்பட்டினம்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நகரமைப்பு நாகை 1 3

பள்ளிப்படை. இவ்வாறு நேர்ந்த பள்ளிப்படைகளே பிற்காலத்தில் பெருங்கோயில்களாயின. இன்றும் இறந்தவர்க்கு 16ஆம் நாள் ஆற்றப்படும் நீர்க்கடன் நிகழ்ச்சி நீர்நிலைக் கரையில் நிகழும். அக்கரை நிகழ்ச்சி நாற்கோணத்தில் மண்ணைக் கோலி மதிற்கூவர் போன்று அமைத்து நான்குபுறமும் வாயில் அமைப்பர். உள்ளே நான்கு மூலையிலும் சிறு தெய்வப் பலியிடம் கட்டமாக அமைக்கப் பெறும். மையத்தில் தீக்குழி அமைத்து இறந்தவர்க்கு ஈமக்கடன் போன்ற நிகழ்ச்சி நிகழும். இதற்குமுன் அவர்க்கு நாட்டுவதற்குக் கல் கொணரப்படும். இன்றும் கல்நாட்டிக் கருமம் செய்தல் என்பர். இவ்வமைப்பும் பள்ளிப்படையின் மறுபதிப்பே யாகும். இவ்வாறு அமைத்த பள்ளிப் படையில் எழுந்த நடுகல்லே பின்னர் அருவுருவ மாக (இலிங்கமாக) உருப்பெற்றது. இறையுணர்வை மட்டும் அடித்தளமாகக் கொள்ளாமல் மக்கள் வரலாற்றுப் போக்கையும் எண்ணினால் இவ்வமைப்பின் உண்மை விளங்கும்.

இவ்வாறான அருவுருவமாம் இலிங்க வழிபாடே சைவ வழிபாடாக வளர்ந்தது. காலவளர்ச்சியில் நாகையிலும் இவ்வமைப்புச் சிறு கோயில்கள் உருவாயின. நகரின் நடுப்பகுதியில் தோன்றிய சிவன்கோயில் முன் கண்ட சிந்தாற்றின் வடக்குக் கரைப்பகுதியில் உண்டாயிற்று. அஃது இன்றும் நடுவர் கோயிலாக உள்ளது.

இதுபோன்று கோயில் தொடக்கம் வெட்டவெளியில் மரத்தடியில் நேர்ந்தது. நாகையில் பதரிதிட்டைக்குத் தெற்கில் ஒரு பெரும் வெட்ட வெளி இருந்ததை அறிந்தோம். அவ்வெட்டவெளியில் ஒர் அருவுருவத் திருஉடல் அமைந்த சிறு கோயில் உருவாயிற்று. அது சைவக் கோயில்,

பாசுபதத்தார் வருகை

இப்போது ஆறாம் நூற்றாண்டில் புகுகின்றோம். சைவத்தில் ஒரு சிறு சைவமாற்றம் நேர்ந்தது. சைவசமய ஏணிப்படிகள் (சோபானம்) நான்கு. அவற்றுள் அகப்புறச் சைவம் ஒன்று. அதன் ஆறுபிரிவில் பாசுபதத்தர் ஒரு குழுவினர். அதனைத் தோற்றுவித்தவர் வகுளிசர் என்பார். இவர் மராத்திய மாநிலத்துப் பம்பாய்ப் பகுதியில் கார்வான் எனப்படும் ஊரில் தோன்றியவர். கார்வான் கரோகண் என்றும் கரோகணம் என்றும் வழங்கப்பெறும். இக்கரோணர் இலிங்க வழிபாடு உடையவர். வடபுலத்தவராகிய இச்சைவர் தென்புலத்தி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/161&oldid=585042" இலிருந்து மீள்விக்கப்பட்டது