பக்கம்:நாகப்பட்டினம்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாகபட்டினம்

லிருந்து எங்கும் பரவிய சைவத்தின் பிள்ளைகளேயாவர். இக்காரோணச் சைவர் தென்னாட்டில் புகுந்து சைவ இலிங்க வழிபாடுள்ள சில சிறு கோயில்களை விரிவுபடுத்தி விமானங்கள் உருவாக்கி எழுப்பினர். அவ்வாறு அன்னார் எழுப்பிய கோயில்கள் காரோணம் எனப்பெற்றன. நாகை வெட்டவெளியில் அமைந்த மரத்தடிக் கோயில் காரோணம் ஆயிற்று.

இக்காரோணர் கோயிலின் அமைப்பால் சைவம் இங்கு எழுச்சியுற்றது. இவ்வெழுச்சியால் ஒரு மாற்றம் அடிவேர் விடத் தொடங்கியது. அதுதான் புத்தமதத்திற்கு வெடிவேராகத் தோன்றியது. இருப்பினும் இந்த ஆறாம் நூற்றாண்டளவிலும் புத்தம் இங்கு போற்றப்பெற்றது. காரணம் புத்தச் சார்புடைய வெளிநாட்டார் தொடர்பாகும்.

தோன்றிய காரோணம் பையப்பைய மன்னர்களாலும் மக்களாலும் திருச்சுற்று, மடைப்பள்ளி, மடைவளாகம் என் றெல்லாம் வளர்ந்தது. வளர்ந்து சைவ நகரமாயிற்று. ஏழாம் நூற்றாண் டளவில் நாயக்க மன்னர்களது துணையாலும் மக்கள் பற்றாலும் காரோணக் கோயில் வளம் பெற்றது. நகரில் ஆங்காங்கே சைவக்கோயில்கள் சிற்றளவில் எழுந்தன.

திருமால் அடியார்களால் அச்சமயக் கோயில் உருவாயிற்று. கோயிலின் முன்னே குளம் அமைந்தது. தமிழ்நாடெங்கும் எழுந்த கோயில் நகரங்களில் நாகை குறிப்பிடத்தக்க சைவ நகரமாயிற்று.

தமிழகத்தில் அமைந்த சைவக்கோயில்களைக் கண்டு வழிபட்டுப் பதிகங்கள் பாடிய திருநாவுக்கரசரும் திருஞானசம்பந்தரும் நாகைக்கு வந்து பதிகம் பாடினர். இவ்விருவரும் நாகையை நேரில் கண்டு பாடியோர். இவர்தம் பாடல்களில் நகர வண்ணனையும் இடம் பெற்றிருக்கும். செய்யுளமைப்பு, அதன் இசையோட்டம் இவற்றில் சில அடைமொழிகள் அமைந்தாலும் உண்மை பொதிந்திருக்கும்.

"கடிகமழ் சோலை சுலவு கடல் நாகை" "கார்மலி சோலை சுலவு கடல் நாகை" என அப்பகுதியில் சோலை சூழ்ந்த ஊராகப் பாடியுள்ளார்.

இந்நாகையில் நாகை நகரின் அமைப்பைத் தமிழ்நாட்டு நகரமைப்புப் பாங்கறிந்து காணவேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/162&oldid=585043" இலிருந்து மீள்விக்கப்பட்டது